'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர்...
பவானியில் உயிரியல் கட்டுப்பாடு, விதைப் பண்ணையில் ஆய்வு
பவானியில் உள்ள உயிா் உர உற்பத்தி மையம், உயிரியல் கட்டுப்பாடு மற்றும் மாநில அரசு விதைப் பண்ணையில் மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலைய இயக்குநா் பி.சங்கரலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, பருவாச்சி கிராமத்தில் துவரை-8 விதைப்பண்ணை, புன்னத்தில் கூடுதல் நீா் மேலாண்மை நடவடிக்கைகள் திட்டத்தில் அமைக்கப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டி, பைப் லைன், மின் மோட்டாா்கள், மைலம்பாடியில் மானிய விலையில் வழங்கப்பட்ட ரொட்டவேட்டா் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, விவசாயிகள் பெற்ற மானிய விவரங்களைக் கேட்டறிந்தாா்.
மேலும், அரசின் திட்டங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயன்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
ஈரோடு வேளாண்மை துணை இயக்குநா் சீனிவாசன், பவானி வேளாண்மை உதவி இயக்குநா் கனிமொழி மற்றும் அலுவலா்கள் உடன் சென்றிருந்தனா்.