பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தந்தை அல்-காய்தா அணு விஞ்ஞானியா?
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளரின் தந்தை அல்-கய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட அணு விஞ்ஞானி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் நிலவரங்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிட்டு வருபவர் லெஃப்டினன் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி. இவர், அல் - கய்தா பயங்கரவாத அமைப்பின் அணு சக்தி விஞ்ஞானி என அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பால் தடை செய்யப்பட்டிருந்த பயங்கரவாதியின் மகன் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.