செய்திகள் :

’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

post image

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் காவல் துறை வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை பார்த்தேன். இன்னும் அது தொடர்பாக முழுமையாக படிக்கவில்லை. அதை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன். வெளிநாட்டு மதுபானங்கள் ஏற்கனவே மதுபான கடையில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த துறையில் யாரும் மோனோ போலியாக இருக்கக் கூடாது. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ, அது கொடுக்க வேண்டியது கடமை.

ஏற்கனவே பட்வைசர் பீர் குறித்து கேட்டார்கள். பாஸ்டர்ஸ் சரக்கு கோரிக்கை குறித்து பரீசிலிக்கப்படும். இன்று சட்டமன்றத்தில் ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். பண பரிவர்த்தனை இருக்கக்கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்கேன், ஜி பே போன்றவை இருந்தும் பத்து ரூபாய், இருபது ரூபாய் பிரச்சனை இருந்தது. அது இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்று ஆன்லைன் புக்கிங் ஒர்க்கிங்கில் இருந்தது. இன்று மட்டும் 700 பேருக்கும் மேல் ஆர்டர் செய்து வாங்கி இருக்கின்றனர். ஆர்டர் செய்வதிலும் சில பிரச்சனைகள் இருக்கிறது. இது ஒரு முயற்சி. இதில் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது என கவனிக்கிறோம்.

விக்னேஷ்
விக்னேஷ்

இது குடிப்பவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது கிடையாது. ஜிபே பண்ணுவதற்கு ஒரு நேரமாகும் அந்த நேரத்தை குறைத்து இருக்கிறோம். பில் வேண்டும் என கேட்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பு. க்யூ ஆர் கோட் காட்டினால்தான் என்ன ஆர்டர் பண்ணி இருக்கின்றனர் என்பதே தெரியும். ஆன்லைனில் மதுவகைகளை  தேடிப் பார்த்து வாங்குவது, வேண்டும் என்கிற மதுவை வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். சில கடைகளில் சில பிராண்ட் சரக்குகள் மட்டுமே விற்கின்றனர். சில சரக்குகளை மட்டும் விற்க முயற்சிக்கின்றனர். அந்த புகார்களின் அடிப்படையில் ஆன்லைன் முறை  கொண்டு வரப்பட்டது.

எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களாக பார்க்கும் போது, என்னென்ன பிராண்ட் இருக்கின்றது என சொல்ல வேண்டியது கடைநடத்துபவர்களின் பொறுப்பு. என்னென்ன சரக்கு இருக்கிறது என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த துறையை சரிப்படுத்த முயற்சி எடுக்கவில்லை. நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். வசதி ஏற்படுத்துவது குடிப்பதை ஊக்குவிப்பது கிடையாது” என்றார்.

'முதல்வர் விஜய்யின் எம்.பிக்கள் கூட்ட அழைப்பை புறக்கணிக்கும் திமுக, அதிமுக?' - பின்னணி என்ன?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். நாளை மாலை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் திம... மேலும் பார்க்க

'சிறப்பு தரிசனம் செய்த பிரேமலதா; மின்னலை விழுங்கிய எடப்பாடி பழனிசாமி!' - சட்டமன்றம் ஹைலைட்ஸ்!

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. வாதம்...விவாதம்...பதிலடி என கட்டா குஸ்தியா நீண்ட இன்றைய நாளின் சில ஹைலட்ஸ் இங்கே!Assemblyவெள்ளிக்கிழமை என்பதால் சட்டமன... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக, சிவசேனா, திரிணாமுல் வாக்குகள் போதாதா? பாஜகவிற்கு இன்னும் சிக்கல்!

மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றிற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதே 'தொகுதி மறுவரையறை மசோதா'. இந்தத் தொகுதி மறுவரையறையின் மூலம் மக்களவை சீட்டுகள் 543-ல் இ... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்க கப்பல்கள் கடந்து செல்ல தடை? ஈரான் `புது' பிளான்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை... அமெரிக்காவும் விடுவதாக இல்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது - ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம். இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..!" - சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

``அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக் கொடுத்தார்" என்று திமுக எம்.எல்.ஏ ரிஷிவந்தியம் கார்த்திகேயன் கூறியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.தமிழக அரசி... மேலும் பார்க்க

``கடைசிகாலம் வரை எடப்பாடியாரின் படைத்தலைவர்களில் ஒருவனாக இருப்பேன்!" - கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தி.மு.க-வில் சேரவிருப்பதாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க தொடர்ந்து இர... மேலும் பார்க்க