செய்திகள் :

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" - ட்ரம்ப் பேச்சு

post image

நேற்று வெள்ளை மாளிகையில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனால், அங்கே திடீரென துப்பாக்கி சூட்டை ஒருவர் நடத்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்தக் குற்றவாளியும் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூட்டு குற்றவாளியின் புகைப்படத்தை ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ட்ரம்ப் பகிர்ந்த குற்றவாளியின் புகைப்படம்
ட்ரம்ப் பகிர்ந்த குற்றவாளியின் புகைப்படம்
அதன் பிறகு, இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசிய முக்கிய புள்ளிகள்...

> இது மிகவும் எதிர்பாராத ஒரு சம்பவம் ஆகும். ஆனால் ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இந்தச் சம்பவத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர்.

> இந்தச் சம்பவத்தில் ஒரு அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால், அவர் உயர்தர குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்.

குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால், மிக அருகில் இருந்து சக்திவாய்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டும், அவரை அது காப்பாற்றியது.

நான் அந்த அதிகாரியிடம் பேசினேன்... அவர் நலமாக இருக்கிறார்.

> இன்றிரவு (நேற்று) நடந்த சம்பவங்கள் ஆராயப்பட்டது. இந்த கட்டடம் போதிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

இதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, ஆனால், இதனால்தான் வெள்ளை மாளிகையில் நாங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அவசியமாகின்றன.

அது - மிகப்பெரிய அறையாகவும், டிரோன் தாக்குதல்களைத் தாங்கும் திறன் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகளுடன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

> கடந்த இரண்டு ஆண்டுகளில், தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல. பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்... அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு புளோரிடாவின் பாம் பீச்சிலும் நடந்தது. அப்போதும் சட்ட அமலாக்கத் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம்; விஜய்யின் சர்ப்ரைஸ் விசிட்! | Photo Album

திருச்செந்தூர் கோயிலில் கையில் வேலுடன் சுவாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்! சர்ப்ரைஸ் விசிட் போட்டோஸ்!திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா? மேலும் பார்க்க

திருச்செந்தூரில் `சத்ரு சம்ஹார பூஜை' செய்த விஜய் - வெற்றிக் கணக்கு பலிக்குமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ச... மேலும் பார்க்க

TVK: 'தடைகள் நீங்க விஸ்வரூப தரிசனம்; வேட்பாளர்களுடன் முக்கிய மீட்டிங்?' - விஜய்யின் 'மே4' பிளான்!

தவெக தலைவர் விஜய் திடீரென இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்டுக்குக் காரணம் என்ன? ரிசல்ட்டுக்கு முன்பாக அவரின் அடுத்தக்க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பாரம்பர்ய மரபுப்படி மீட்டெடுக்கப்பட்ட 140 ஆண்டுகால நீதிமன்ற கட்டிடம்! | Photo Album

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம் மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: குடிநீர்த் தொட்டி, குழாய்களை திமுக பிரமுகர் உடைத்ததாகப் புகாரளித்த CPM நிர்வாகி கைது

கிராமக் குடிநீர்த் தொட்டி, குழாய்களை உடைத்ததாக திமுக பிரமுகர் மீது புகார் கொடுத்த இந்திய ஜனநயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Wayanad: 51 குடும்பங்களுக்குப் புதிய வீடு; மத நல்லிணக்கத்துடன் நடந்த புதுமனை புகுவிழா!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிலச்சரிவுப் பேரிடரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அனைத்தையும் இழந்து நின்ற அந்தப் பகுதி மக்களுக்கு இந்த ஆண்டின் மார்ச் 1-ம் ... மேலும் பார்க்க