செய்திகள் :

"பாரதிராஜா சார் கிட்டதான் சேரணும்னு நினைச்சேன்; ஆனா பாலச்சந்தர் சார் கதவு திறந்தது" - சமுத்திரகனி

post image

விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், 'காந்தா' படத்துக்காக, சிறந்த குணச்சித்திர நடிகர் விருதைப் பெற்றார் நடிகர் சமுத்திரக்கனி. இவருக்கு விருதை வழங்கி, சிறப்பித்தவர் நடிகர் இந்திரன்ஸ்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ``10 வருஷம் ஆச்சு. நாமளும் நடிச்சிக்கிட்டே இருக்கோமே, எல்லா இடத்துலயும் நாமினேஷன் குடுக்குறாங்க. அப்புறம் கடைசில இல்லைன்றாங்கன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. இப்போ கிடைச்சுடுச்சு. நன்றி விகடன்.

சமுத்திரகனி - இந்திரன்ஸ்
சமுத்திரகனி - இந்திரன்ஸ்

விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 30 வருஷமா இருக்கு. 2003-ல 'அலைகள்' சீரியல்ல வேலை பண்ணும்போது, விகடன் எம்.டி சீனிவாசன் சார் 'நாம ஒண்ணு பண்ணலாமா?'ன்னு கேப்பாரு. சார், இப்பவும் நான் ரெடியா இருக்கேன் சார்! பேரன்பு கொண்ட இந்திரன்ஸ் சார் கிட்ட இந்த அவார்ட வாங்குறது கடவுள் கையால வாங்குற மாதிரி பெருமையா இருக்கு.

இப்போ 'அரசன்' ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு, முடிஞ்ச உடனே 'வடசென்னை 2' வரும். இந்த ஆண்டு இறுதியில 'ராஜன் வகையறா' வந்துடும்.

பாரதிராஜா சார் கிட்டதான் சேரணும்னு நினைச்சேன். ஆனா பாலச்சந்தர் சார் கதவு திறந்தது.

பாலச்சந்தர் சாரின் நூறாவது படம். இலங்கையில் ஷூட்டிங். காலையில் எப்போதும் இயக்குநரின் அறை வாசலில் சென்று நிற்பேன். சொன்ன நேரத்துக்குச் சரியாக வெளியே வருவார்.

ஒருநாள் காலை 8 மணிக்கு அவர் அறையின் வெளியே நின்றேன். அன்று கதவு திறக்கவே இல்லை. 10 நிமிடங்கள் கழித்து நானே கதவைத் தட்டிவிட்டேன். உள்ளே இருந்து 'யெஸ்' என ஒரு குரல். முறையாகச் சட்டையை இன் செய்து கிளம்பி, குறுக்கும் நெடுக்குமாக இயக்குநர் நடந்துகொண்டிருந்தார். 'என்ன சார்...' என்றேன்.

சமுத்திரகனி
சமுத்திரகனி

'அந்த முதல் ஷாட் நல்லா வந்துடணும்டா...' என்றார். 'நூறாவது படம் சார்...ஏன் பயம்?' என்றேன். 'அந்த பயம் இருக்குற வரைக்கும்தாண்டா சினிமாவுல இருக்க முடியும்' 'அடுத்த ஷாட் பயம் இருக்குற வரைக்கும்தான் இண்டஸ்ட்ரில இருப்பே'ன்னு சொன்னாரு.

ஒரு ஷாட் ஓகே ஆனதும் 'I got it'னு சொல்ற அந்த முகத்தை மறக்க முடியாது.

டைரக்டர் நம்பரை இன்னும் 'டைரக்டர்'னே போன்ல வெச்சிருக்கேன். குருவா பார்த்தா குரு, நண்பனா பார்த்தா நண்பன், அப்பாவா பார்த்தா அப்பா!" என்று கூறினார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க