செய்திகள் :

"தலைவரோட Swag-ஐ மானிட்டர்ல பாத்துட்டு விசில் அடிச்சுட்டேன்" - 'தர்மன்' குறித்து அஸ்வத் மாரிமுத்து

post image

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 நிகழ்வில் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருதை ‘டிராகன்’ திரைப்படம் பெற்றது.

‘கலைப்புலி’ எஸ்.தாணு வழங்கிய இந்த விருதை ‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி இருவரும் பெற்றுக்கொண்டனர்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ``எஸ்.டி.ஆர் இப்போ `அரசன்’ திரைப்படத்தில் பிஸியாக இருக்காரு. சூப்பர்ஸ்டாரின் `தர்மன்’ முடிச்சிட்டு வந்தவுடனே ‘STR 51’ ஆரம்பிக்கிறோம்.

அஸ்வத் மாரிமுத்து - தயாரிப்பாளர் ஐஸ்வர்யா
அஸ்வத் மாரிமுத்து - தயாரிப்பாளர் ஐஸ்வர்யா

`தர்மன்’ சூப்பர்ஸ்டார் படம். அதுவும் கமலஹாசன் சார் தயாரிப்பு. அதனால, அதுல எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு.

ரஜினி சாருக்கு வயசான மாதிரியே தெரியலை. `படையப்பா’ படத்துல 20 வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு வயசானதே தெரியலைங்கிற மாதிரி எனக்கு இப்ப அப்படியேதான் இருக்கு. செட்ல துள்ளி குதிச்சுக்கிட்டு ஜாலியா இருக்கார்.

`தர்மன்’ ரொம்ப ஸ்பெஷல். தமிழ் ஆடியன்ஸ், இந்தியன் ஆடியன்ஸ் எல்லாருக்குமே ரொம்ப நேர்த்தியான ஒரு படமா இது இருக்கும்.

அதாவது, தலைவருடைய ஃபேன்ஸ், தலைவருடைய ஸ்வாக், தலைவருடைய எல்லாமே நம்ம ஸ்டைல்ல ஜாலியா அப்படியே இருக்கும்.

நிறைய இயக்குநர்களோட கனவு ரஜினி சாரோட, கமல் சாரோட படம் பண்ணணும்னு இருக்கும்.

அதை நான் பண்றேன்ங்கறதால பெரிய கடமை எனக்கு இருக்கு. `தர்மன்’ படம் ‘பிளாஸ்ட்’ ஆக இருக்கும்.

தலைவருடைய முதல் நாள் ஷூட்டில் காரிலிருந்து இறங்கி வந்து மருத்துவமனைக்குச் செல்வதுபோல வைத்தோம். மானிட்டர் பார்த்து எனக்கு ஸ்வாக்-ஆக இருந்தது. விசில் அடிச்சு அங்கேயே என்ஜாய் பண்ணேன்” என்றார்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

`ஒருமுறை வெற்றிபெறுவது எளிது; ஆனால், அந்த வெற்றியைத் தக்கவைக்க..!' - விகடன் மேடையில் ஆர்.ஜே பாலாஜி

`கருப்பு’ திரைப்படம் குறித்து, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில் ஆர்ஜே.பாலாஜி மனம் திறந்து பேசினார்.அப்போது அவர், `` 'கருப்பு' படத்துக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. பொருளாதாரரீதியாகவும்... மேலும் பார்க்க

"பாரதிராஜா சார் கிட்டதான் சேரணும்னு நினைச்சேன்; ஆனா பாலச்சந்தர் சார் கதவு திறந்தது" - சமுத்திரகனி

விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், 'காந்தா' படத்துக்காக, சிறந்த குணச்சித்திர நடிகர் விருதைப் பெற்றார் நடிகர் சமுத்திரக்கனி. இவருக்கு விருதை வழங்கி, சிறப்பித்தவர் நடிகர் இந்திரன்ஸ். நடிகர் சமு... மேலும் பார்க்க

"கற்றது தமிழுக்கு விகடன் கொடுத்த மார்க்குக்கு எனக்கு கோபம்" - ராம் ஷேரிங்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், 'பறந்து போ' படத்துக்காக, 'சிறந்த இயக்குநர் விருதை ரிஷப் ஷெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டார் இயக்குநர் ராம். விருது பெற்ற இயக்குநர் ராம் பேசியபோது,."எனக... மேலும் பார்க்க

"நானும் தடுமாறினேன்; ஆனா உங்க அன்பால விழவே விடாம தாங்கிப் பிடிச்சிருக்கீங்க" - ரவி மோகன் எமோஷனல்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025 மேடையில் நடிகர் ரவி மோகனின் ஷேரிங்க்ஸ்..."2015-ல ‘தனி ஒருவன்’ ரிலீஸானப்போ எனக்கு எல்லா அவார்டுமே கிடைச்சுது. விகடன் அவார்டும் கிடைச்சுது. ஆனா அவங்க ஒரு நல்ல மனசோட, ... மேலும் பார்க்க

"நடிக்க வரும்போதே `எனக்கு விருதெல்லாம் கிடைக்காது’ன்னு நினைச்சேன்" - பிரதீப் ரங்கநாதன் ஷேரிங்க்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழாவில் `டிராகன்’, `டியூட்’ திரைப்படங்களுக்காக, சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்த விருதை வழங்கியவர் நடிகர் ரவி மோகன்.விருதைப் பெற்றுக்கொண்ட பி... மேலும் பார்க்க

"டூரிஸ்ட் ஃபேமிலி ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு" - அபிஷன் ஜீவிந்த்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் பெற்றார். விருது பெற்று பேசிய அவர், “விகடன் விருதை தூக்கிப் பார்க்க வேண்டும்... மேலும் பார்க்க