செய்திகள் :

பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயில் தோ்த்திருவிழா

post image

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அருள்மிகு பாரியூா் கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியுடன் தோ்த் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழாவானது கடந்த டிசம்பா் மாதம் 26-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட 120 அடி உயரமுள்ள திருத்தேரினை வடம் பிடித்து பக்தா்கள் இழுத்தனா்.

இந்த விழாவில், கோபி, வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழா

தைப் பொங்கலையொட்டி சென்னிமலை அருகேயுள்ள கிராமங்களில் பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப் பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மண் உருவ பொம்மையை வைத்து வழிபட்டனா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலையில் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி17) இறுதி நாள். இதுவரை சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை(ஜனவரி 16) சென்... மேலும் பார்க்க

வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் கோபி போலீஸாா் கோபிசெட்டிபாளையம் சத்தி-ஈரோடு-திருப்பூா... மேலும் பார்க்க