செய்திகள் :

BB Tamil 9: மீண்டும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்; இம்முறை டபுள் எவிக்சன் – பிக்பாஸ் காட்டிய அதிரடி

post image

விஜய் டிவியில் 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை சில தினங்களுக்கு முன் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார்.

கடந்த வார எவிக்‌ஷனில் ரம்யா மற்றும் வியானா ஆகியோர் வெளியேறினர்.

அரோரா, ஆதிரை
அரோரா, ஆதிரை

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இவர்களிலும் பிரஜின் எவிக்ட் ஆகி வெளியேறி விட்டார்.

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு வரை பிக்பாஸ் செட்டில் நடந்தது.

காலை ஷூட்டிங் தொடங்கியதும் விஜய் சேதுபதியின் வழக்கமான விசாரிப்புகள் நடந்தன.

மாலை எவிக்‌ஷனுக்கான நேரம் வந்தது. சாண்ட்ரா, ஆதிரை எஃப்.ஜே உள்ளிட் சிலர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் டபுள் எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ளது.

எஃப் ஜே

அதாவது கடந்த இரண்டு வாரம் கடைசி நமிடத்தில் தப்பிய எஃப்.ஜே மற்றும் இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஆதிரை இருவருமே வெளியேறியுள்ளனர்.

எஃப்.ஜே, ஆதிரை, வியானா ஆகியோருக்கிடையில் முக்கோணக் காதலா எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று பேருமே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

அப்படின்னா இனிமே கண்டெண்ட் என்கிறீர்களா, அதான் பார்வதி கம்ருதீன் இருக்கிறார்களே, என்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9: "இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே"- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவர... மேலும் பார்க்க

`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்

சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் க... மேலும் பார்க்க

BB Tamil 9: "அப்படி தான் தெரியுது; பச்சையா தெரியுது FJ"- வாக்குவாதம் செய்யும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.நாமினேஷனில் சாண்ட்ரா, ... மேலும் பார்க்க