செய்திகள் :

பால் கொள்முதல் விலை... பஞ்சாப்பில் ரூ.65, தமிழ்நாட்டிலோ ரூ.34!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்குச் சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ‘தமிழ்நாடு அரசு தற்போது உயர்த்தியுள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு. இது நியாயமானதல்ல’ எனக் கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், ‘ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் விலை உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை, லிட்டருக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இதன்படி, இனிவரும் நாள்களில் விவசாயிகளுக்குப் பால் கொள்முதல் விலையாக 34 ரூபாய் கிடைக்கும். இந்த விலை நிச்சயமாகப் போதாது. பசுந்தீவனம், அடர் தீவனம், பால் கறவைக் கூலி, மருத்துவச் செலவுகள் மற்றும் இதர பராமரிப்பு செலவுகள் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, கறவை மாடுகள் வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, லிட்டருக்குக் குறைந்தபட்சம் 50 ரூபாயாவது வழங்கினால்தான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும்.

கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு சராசரியாக 50 ரூபாய் வழங்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் 62 ரூபாயும், பஞ்சாப்பில் 65 ரூபாயும் வழங்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, லிட்டருக்கு 44 ரூபாய் பால் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றது. ஆனால், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு, விவசாயிகளை மிகுந்த விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

‘தமிழக முதல்வர் விஜய், தற்போது வெளியிட்டுள்ள பால் விலை உயர்வைக் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு லிட்டருக்குக் குறைந்தபட்சம் 10 ரூபாயாவது உயர்த்தி வழங்க வேண்டும்’ என்பது கறவை மாடு வளர்ப்போரின் நியாயமான எதிர்பார்ப்பு.

தமிழக முதல்வர் விஜய், விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பாரா? பொறுத்திருந்து பார்க்கப் போதுமான காலமில்லை. உடனடியாக இதை கவனத்தில்கொண்டு நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார் என உறுதியாக நம்புவோம். தவறும்பட்சத்தில் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் விவசாயிகள். மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள், பால். தமிழக அரசு நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

- ஆசிரியர்

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க