செய்திகள் :

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

post image

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில், நிர்வாக நடைமுறைகள், குவாரி கண்காணிப்பு, அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன.

இயற்கை வளங்கள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையை கவனித்து வரும் மாண்புமிகுவின் அலுவலகத்தைச் சுற்றி வெளியாகும் தகவல்கள், துறை நிர்வாகத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

TAMIN இருக்கும்போது புதிய Corporation எதற்கு?

தமிழ்நாடு அரசின் கனிம வளச் செயல்பாடுகளில் நீண்டகாலமாக முக்கியப் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் எனப்படும் TAMIN நிறுவனம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கனிம வளங்களை கண்காணிக்கவும் விநியோகம் செய்வதற்காகவும் ‘Tamil Nadu Minerals Development Corporation’ என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

புதிய Corporation மூலமாக இதுவரை அரசுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்த சில பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ‘மன்னர்’ பெயர் கொண்ட நிறுவனம் மூலமாக சில பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே TAMIN செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக மற்றொரு நிறுவனம் உருவாக்கப்படுவதன் அவசியம் என்ன? புதிய நிறுவனத்தின் அதிகார வரம்பு என்ன? எந்தெந்த கனிம வளங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் கையாளப்பட உள்ளன? தனியார் நிறுவனங்களுக்கு என்ன பங்கு வழங்கப்பட உள்ளது? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

கிராவல் மண் விநியோகத்தில் சிக்கல்

இதற்கிடையே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தேவையான கிராவல் மண் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராவல் மண் குவாரிகளில் இருந்து நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மண் வழங்குவதற்கான அனுமதிகள் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மாண்புமிகுவின் அலுவலகத்திலிருந்து நேரடி அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் சில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராவல்

Drone Survey மூலம் கிடைக்கும் தகவல்கள் நேரடியாக மாண்புமிகு அலுவலகத்துக்கா?

குவாரிகளில் விதிமீறல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்டறிய Drone Survey நடத்துவது வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையாக உள்ளது. Drone Survey மூலம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகள் அல்லது RDO அளவில் விசாரணை நடத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தற்போது சில இடங்களில் Drone Survey மூலம் கிடைக்கும் தகவல்களை வழக்கமான நிர்வாக நடைமுறைகளுக்குச் செல்லாமல் நேரடியாக மாண்புமிகுவின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மாயஜால அடைமொழி கொண்ட மாண்புமிகுவின் உதவியாளர் குறித்து புகார்கள்!

இதனிடையே, அமைச்சர் அலுவலகத்தில் Senior PA-வாக பணியாற்றும் மாயஜால பெயர் கொண்டவரின் பங்கு குறித்தும் துறை அதிகாரிகள் மத்தியில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான கோப்புகள் முதல் அதிகாரிகள் தொடர்பான முடிவுகள் வரை அவரது செல்வாக்கு அதிகமாக இருப்பதாக சில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சில பெண் அதிகாரிகளை அழைத்து மிரட்டியதாகவும், கடந்த காலங்களில் கனிம வளத்துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் விவரங்களை சேகரித்து வைத்து அந்த அதிகாரிகளிடம் குறிப்பிட்ட நபர்களுக்கே ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் அதிகாரிகளின் பழைய கோப்புகளை மீண்டும் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படுவதாகவும் சில அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Digital Mining Platform: டெண்டருக்கு முன்பே நிறுவனத்தை தேர்வு செய்துவிட்டார்களா?

கனிம வளத்துறையில் தற்போது பேசப்படும் மற்றொரு முக்கிய விவகாரம் Digital Mining Platform.

தமிழகத்தில் உள்ள குவாரிகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும், குவாரிகளில் நடைபெறும் நடவடிக்கைகளை தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து விதிமீறல்களைத் தடுக்கவும் புதிய Digital Mining Platform உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், இந்தத் திட்டத்துக்கான டெண்டர் நடைமுறையில்தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இன்னும் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என அறிவிக்கவில்லை, ஆனால் அந்த பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘Xentra Technologies’ நிறுவனத்துக்கு இந்தப் பணியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் காவல்துறையின் டிஜிட்டல் சேவைகளை மேற்கொண்ட நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.

உறவினர் மூலம் பரிந்துரையா?

Xentra Technologies நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவதற்கான பரிந்துரையை மாண்புமிகுவின் உறவினர் மேற்கொண்டதாகவும் துறை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

TAMIN ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிலையில் புதிய Minerals Development Corporation உருவாக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பது முதல், கிராவல் மண் விநியோகம், Drone Survey, அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் Digital Mining Platform டெண்டர் வரை பல்வேறு விவகாரங்களில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

Tamilnadu minerals development corporation மற்றும் Digital mining platform தொடர்பான அறிவிப்புகள் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் கனிம வளத்துறையின் மானிய கோரிக்கையில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.!

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்... அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை மாநகராட்சியில்உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், இவர் மனைவி மணியம்மை மதுரை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல... மேலும் பார்க்க

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' - 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேடிசி பிரபாகர்

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள்.... மேலும் பார்க்க

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" - சென்னையில் பிரகாஷ் ராஜ்

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.Prakash Rajஅந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேச... மேலும் பார்க்க

"இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - நீலம் பண்பாட்டு மையம்

கேளம்பாக்கம் தையூரில் 22 வயதான பிரவீன் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்ய இளைஞர்கள் பலர் ஓ.எம்.ஆர் பகுதியி... மேலும் பார்க்க

`துகாராமுக்கு நன்றி' - அதிரடி ரெய்டுகள்; சுத்தத்துக்கு மாறும் மும்பை ஹோட்டல்கள், வடாபாவ் கடைகள்!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் பால் கலப்படத்திற்கு எதிராக... மேலும் பார்க்க

தலைமைச் செயலக கட்டடப் பணி: ``எந்த விதிமீறலும் இல்லை" - தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மேற்கோள்ளப்படும் கட்டடப் பணிகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு விள... மேலும் பார்க்க