செய்திகள் :

"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்"- ஸ்டாலின்

post image

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்... பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!

சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம்.

தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.

திமுக | ஸ்டாலின்
திமுக | ஸ்டாலின்

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு, கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!

தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி" என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பரந்தூர்: ``தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக..." - முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் - காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், 'விஜய்தான் அடுத்த ... மேலும் பார்க்க

இலவச சிலிண்டர்: ``3 சிலிண்டர்கள் தானா? மீதி எப்போது?" - டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாள்கள் விடுமுறைக்குப் பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்... மேலும் பார்க்க

"லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!"- தவெக-வைச் சாடிய ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.24) கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், "ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தி... மேலும் பார்க்க

பரந்தூர்: ``இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" - அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்... மேலும் பார்க்க