செய்திகள் :

இலவச சிலிண்டர்: ``3 சிலிண்டர்கள் தானா? மீதி எப்போது?" - டிடிவி தினகரன் கேள்வி

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாள்கள் விடுமுறைக்குப் பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ``பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்." என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதலமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா? அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!"- தவெக-வைச் சாடிய ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.24) கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், "ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தி... மேலும் பார்க்க

பரந்தூர்: ``இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" - அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்... மேலும் பார்க்க

"கட்சி வேறுபாடின்றி பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.!"- எம்.பி கனிமொழி

"அக்கா கனிமொழி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பெண் தோழர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பழைய சங்கிகளோடு சேர்த்து இப்போது தவெக ஆதரவாளர்களும் இணைந்து அச... மேலும் பார்க்க

TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' - அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலரும் 'நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே...' என அவையிலேயே குமுறி வர... மேலும் பார்க்க

"தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்.!"- தங்கம் தென்னரசு சொல்வதென்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க