செய்திகள் :

Once More: "என் வாழ்க்கையில் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது தான்.!"- அதிதி ஷங்கர் ஷேரிங்

post image

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள படம் 'ஒன்ஸ் மோர்'.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஒன்ஸ் மோர் படத்தில்...
ஒன்ஸ் மோர் படத்தில்...

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அதிதி சங்கர், "எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த ஸ்ரீகாந்த் சாருக்கு நன்றி.

என் வாழ்க்கையில் கொஞ்சம் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது 'ஒன்ஸ் மோர்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஆறுதலாக இருந்தது.

அர்ஜுன் தாஸுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் இரண்டு முறை உங்களை (அர்ஜுன் தாஸ்) சந்திக்கும்போது ஒரு ரசிகையாக உங்களைச் சந்தித்தேன்.

முதல் முறையாக அனிரூத் கான்செர்ட்டில் தான் சந்தித்தேன். ரசிகையாக உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கேட்டேன். நீங்கள் சிரித்தீர்கள்.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

இரண்டாவது முறை நீங்கள் எனக்கு JFW விருது கொடுக்கும்போது சந்தித்தோம். மூன்றாவது முறை 'ஒன்ஸ் மோர்' பூஜை நிகழ்ச்சியில் உங்களுடன் பணியாற்றவிருக்கும் ஒரு நடிகையாக சந்தித்தேன்.

அழகான பயணம் உங்களுடன் எனக்கு அமைந்திருக்கிறது. ஒரு வில்லனாக அர்ஜுன் தாஸை நீங்கள் எவ்வளவு ரசித்தீர்களோ... ஒரு லவ்வர் பாயாகவும் இவரை ரசிப்பீர்கள்" என்று பேசியிருக்கிறார்.

Jailer 2: "என் கணவர் என் கனவை நம்பி அதை நிஜமாக்கினார்.!" - 'ஜெயிலர் 2' நடனம் குறித்து நடிகை பூர்ணா

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி, அதில் நடித்திருந்த நட்சத்திரங்கள் என இவைய... மேலும் பார்க்க

``தனி ஒருவர் 2 Update; அரசியல் வருகை; ரசிகர்கள் சந்திப்பு" - நடிகர் ரவி மோகன் பகிரும் தகவல்கள்

ரவி மோகனின் பிறந்த நாள் செப்-5-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களைச் சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யவிப்படவிருக்கிறது. இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே?

திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த ... மேலும் பார்க்க

90 செஷன்கள்; தோள்பட்டை மூட்டு விலகல் - 'டிசி' படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்பர்மேஷன்!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்... மேலும் பார்க்க

'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வநாதன் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் சூர்யா ஒரு துப்பாக்கிச்சுடும் வீரராக நடித்திருந்தார். படத்தில் அந்த க... மேலும் பார்க்க

செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை! - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படு... மேலும் பார்க்க