செய்திகள் :

"கட்சி வேறுபாடின்றி பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.!"- எம்.பி கனிமொழி

post image

"அக்கா கனிமொழி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பெண் தோழர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், பழைய சங்கிகளோடு சேர்த்து இப்போது தவெக ஆதரவாளர்களும் இணைந்து அசிங்கமான மற்றும் கொச்சையானப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றன" என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி "உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.

பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்... மேலும் பார்க்க

TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' - அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலரும் 'நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே...' என அவையிலேயே குமுறி வர... மேலும் பார்க்க

"தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்.!"- தங்கம் தென்னரசு சொல்வதென்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய், அமைச்சர்கள் குறித்து ஒருமையில் பேச்சு - திமுக MLA துரை.சந்திரசேகரன் சர்ச்சை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்விழாவில் மேடைய... மேலும் பார்க்க

"ஒரே திரைப்படத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஓட்டுகிறது.!" - ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூ... மேலும் பார்க்க

'சொந்த ஊரிலேயே அகதி போல இருந்தோம்; சொன்னதை செஞ்சுட்டாரு முதல்வர்.!'- நெகிழும் பரந்தூர் போராட்டகுழு

'பரந்தூர் விமான நிலையத் திட்டம்' ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்குழுவிடம் பேசினோம... மேலும் பார்க்க