செய்திகள் :

"ஒரே திரைப்படத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஓட்டுகிறது.!" - ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

post image

கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்.

அமெரிக்காவின் இந்தத் தடை குறித்து நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கேட்கப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விக்கு அவர், “பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்படும் இந்த அதிமுக்கியத் தடைகள் அனைத்துமே பழைய கதைதான்.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா

அதே திரைப்படம்

அமெரிக்கக் கொள்கைகளில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அதே அடாவடித்தனம்தான் இதுவும்.

சொல்லப்போனால், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் ஒரே திரைப்படத்தைப் போலத்தான் இதுவும் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் மனப்பாடமாக எங்களுக்குத் தெரியும். அதை எப்படி எதிர்கொள்வது, எப்படி முறியடிப்பது என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

'ராணுவ நடவடிக்கை எடுப்போம்', ‘அடிப்போம், அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று மிரட்டியவர்கள், இப்போது மீண்டும் பழைய திட்டங்களுக்கே திரும்புவது, அவர்கள் எந்த அளவிற்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

ஈரான் 'அப்போது'தான் மரியாதை தரும்!

ஈரான் என்ற மாபெரும் தேசத்திற்கு முன்னால், அவர்களுக்கு வேறு வழியே தெரியவில்லை.

அதனால்தான் ஒரே திட்டங்களை மீண்டும் மீண்டும் மேடைக்குக் கொண்டு வருகிறார்கள்.

ஈரானிய மக்களிடம் மரியாதையுடனும், நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான தீர்வுடனும் மட்டுமே பேச முடியும். வேறு வழியே இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் இந்தத் தவறான வழிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏற்கனவே தெரிந்த சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். கண்ணியமான மொழியில் பேசினால், ஈரான் தேசம் மரியாதையோடு பதிலளிக்கும்" என்று பதிலளித்துள்ளார்.

'சொந்த ஊரிலேயே அகதி போல இருந்தோம்; சொன்னதை செஞ்சுட்டாரு முதல்வர்.!'- நெகிழும் பரந்தூர் போராட்டகுழு

'பரந்தூர் விமான நிலையத் திட்டம்' ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் '110' விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்குழுவிடம் பேசினோம... மேலும் பார்க்க

தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! - பின்னணி என்ன ?

புதுச்சேரியில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சாய் ஜெ.சரவணகுமார். நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்த அவரை பதவியில் இருந்து இறக்கிய பா.ஜ.க தலைம... மேலும் பார்க்க

மோடி - ட்ரம்ப் சந்திப்பு: செய்தியாளர் கேள்வி-பதில் 'நோ' சொன்ன இந்தியா; மறந்துப்போன ட்ரம்ப், பிறகு.?

இந்தியப் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது இல்லை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ இதற்கு நேர் எதிர்.தினமும் அவர் எப்படியாவது செய்தியாளர்களைச் சந்தித்துவிடுவார்.கடந்த ஜூன் மாதம் பிரான்சில் ஜி7 உச... மேலும் பார்க்க

'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய் ஆலுக்காஸ்

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ... மேலும் பார்க்க

``TVK-வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி!" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச... மேலும் பார்க்க

‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், “பல்வேறு செய்திகளி... மேலும் பார்க்க