செய்திகள் :

``தனி ஒருவர் 2 Update; அரசியல் வருகை; ரசிகர்கள் சந்திப்பு" - நடிகர் ரவி மோகன் பகிரும் தகவல்கள்

post image

ரவி மோகனின் பிறந்த நாள் செப்-5-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களைச் சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யவிப்படவிருக்கிறது.

இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவிமோகன், ``எனது முதல் படமான 'ஜெயம்' வெளியான காலத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் காட்டி வரும் மாறாத அன்பும் பாசமும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

அன்று சிறுவர்களாக என்னைப் பார்க்க வந்த ரசிகர்கள், இன்று தங்களது குழந்தைகளுடன் குடும்பமாக வந்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரவி மோகன், யோகி பாபு
ரவி மோகன், யோகி பாபு

என் மீது எப்போதும் அன்பைப் பொழியும் ரசிகர்கள் என் கூடவே இருப்பார்கள் என்று கர்வமாகச் சொல்வேன். தனி ஒருவன் திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா, தற்போது நடிகர் கார்த்தியின் படத்தை இயக்கிக் கொண்டே, 2-ம் பாகத்துக்கான திரைக்கதையையும் எழுதி வருகிறார்.

பணிகள் முடிந்ததும் அதுகுறித்த நல்ல செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனது நடிப்பில் வெளியாகவுள்ள 'கராத்தே பாபு' திரைப்படம் என் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும். அதற்கான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இதுதவிர 'ப்ரோ கிளப்' மற்றும் யோகி பாபுவை வைத்து நான் இயக்கி வரும் 'அன் ஆர்டினரி மேன்' ஆகிய படங்களின் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அரசியலுக்கு வர விருப்பமிருக்கிறதா என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.

அதில் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம். அது தவறில்லை. எனக்கும் அந்த ஆர்வம் வரும்பட்சத்தில் நிச்சயமாக அதுகுறித்து யோசிப்பேன். தேர்வுகள் மட்டுமே மாணவர்களின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தங்களது கருத்துக்களைச் சரியாக வெளிப்படுத்துவதே மாணவர்களின் உண்மையான வெற்றி" என்றார்.

Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே?

திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த ... மேலும் பார்க்க

90 செஷன்கள்; தோள்பட்டை மூட்டு விலகல் - 'டிசி' படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்பர்மேஷன்!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்... மேலும் பார்க்க

'ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன் உடைந்த துப்பாக்கி!' - உண்மையான சஞ்சய் விஸ்வநாதன் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் சூர்யா ஒரு துப்பாக்கிச்சுடும் வீரராக நடித்திருந்தார். படத்தில் அந்த க... மேலும் பார்க்க

செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை! - தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

What To Watch: 'மொத ராத்திரி டு ஜனநாயகன்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

இந்த வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.மொத ராத்திரி - தமிழ்ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடி... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது..." - சிவகார்த்திகேயன்

அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார... மேலும் பார்க்க