செய்திகள் :

TN Assembly: "மூன்று சிலிண்டர்கள் இலவசம்; பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது!" - முதல்வர் விஜய் அதிரடி| Live

post image

வெற்றிப் பயணத் திட்டம்

மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் நகர, மாநகர பேருந்துகளில் 40 கி.மீக்கு மிகாமல் மட்டுமே பயணம் கொடுக்கப்படுகிறது.

அதை விரிவுப்படுத்தப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த வெற்றிப்பயணத் திட்டம் தொடங்கப்படும்.

சாதாரண பேருந்துகள் மட்டுமில்லாமல் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் புறநகர் பேருந்துகள், மலைப்பகுதியில் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

இந்தத் திட்டத்தில் பயனடைய எந்தத் வருமான உச்சவரம்பு தகுதியும் கிடையாது. வெற்றிப்பயணத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

- விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

சட்டப்பேரவையில் விஜய் பேச்சு

மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது.

தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை.

விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், முந்தைய அரசு பரந்தூர் - ஏகனாபுரத்தில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட திட்டமிட்டது.

நான் பரந்தூருக்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டேன்.

விவசாயிகளுடன் என்றும் நிற்பேன். இரண்டாவது விமான நிலையம் தேவை.

அதற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடம் தேர்வு செய்யப்படும். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் விதி எண் 110 அறிவிப்பு

"அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

சிலிண்டருக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பொங்கல் பண்டிகை அன்று திட்டம் தொடக்கம்.

ஆண்டுக்கு தோராயமாக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்".

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துக்கொள்ளுங்கள்!

'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய் ஆலுக்காஸ்

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ... மேலும் பார்க்க

``TVK-வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி!" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச... மேலும் பார்க்க

‘என்னிடம் 26 கார்கள் உள்ளதா? எம்.எல்.ஏ தலை சீவக் கூடாதா? குளிக்க கூடாதா?’ – கனிமொழி சந்தோஷ் ஆவேசம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், “பல்வேறு செய்திகளி... மேலும் பார்க்க

'விவசாயிகள்தான் முதுகெலும்பு; பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து' - முதல்வர் விஜய் அறிவிப்பு!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்துக்கு முன்பு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமாக பரந்தூர் விமான நி... மேலும் பார்க்க

``கேரள பாஜக-வில் இருந்து விலகி..! ; தவெக-வில் இணைய சொல்லி விஜய் கேட்டார்" - நடிகர் தேவன்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன். 2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் த... மேலும் பார்க்க

"கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்" - கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், ”தமிழில் வண... மேலும் பார்க்க