செய்திகள் :

`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

post image

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுத்து வருகிறார்.

கணேஷிடம் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ளும் 16 வயது வீராங்கனையை ஜிம்மிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கணேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 வயது வீராங்கனை படிப்பு காரணமாக சமீப காலமாக பயிற்சிக்கு செல்லாமல் இருந்தார். அவரது மொபைல் போனில் கணேஷ் ஹாய் என்று ஒரு மெசேஜ் அனுப்பினார். இது குறித்து அம்மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

`ஃபிரீயாக இருந்தால் வந்து பார்'

மேலும், `எங்கு இருக்கிறாய், ஃபிரீயாக இருந்தால் ஜிம்மில் வந்து என்னை பார்' என்று கணேஷ் பதில் மெசேஜ் அனுப்பினார். பின்னர் 16 வயது வீராங்கனை புறப்பட்டு ஜிம் சென்றார்.

ஜனாதிபதி கையால் விருது பெற்ற கணேஷ்

அங்கு யாரும் இல்லை. கணேஷ் மட்டுமே இருந்தார். மாணவி பயிற்சிக்கு தேவையான ஷுக்களை எடுத்து வந்திருந்தார். வீராங்கனையிடம் காலணிகளை உள்ளே வைக்குமாறு பயிற்சியாளர் அவரிடம் கூறினார்.

அவர் காலணிகளை அறை ஒன்றில் வைக்க செய்யச் சென்றபோது, ​​பயிற்சியாளர் கதவைப் பூட்டிவிட்டு, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர், இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறி அனுப்பி வைத்தார். அப்பெண்ணும் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் நேரடியாக பள்ளிக்கு சென்றார். தான் படிக்கும் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

தோழிகளிடம் கூறி அழுத மாணவி

உடனே ஆசிரியை மூலம் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து உடனே கணேஷை கைது செய்தனர். மாணவி கொடுத்துள்ள புகாரில், "எனக்கு பயமாக இருந்தது. என் மனம் கலக்கமடைந்திருந்ததால், அந்தச் சம்பவத்தை என் தோழியிடம் கூறினேன். கல்லூரியில் நான் அழத் தொடங்கியபோது எங்கள் ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு என் தோழிகள் அனைவரும் என்னிடம் கூறினர். எனவே எனது ஆசிரியையிடம் இது குறித்து தெரிவித்தேன் என்று அவர் தனது புகாரில் தெரிவித்தார். கணேஷ் இதற்கு முன்பு விளையாட்டு பயிற்சிக்காக ஜனாதிபதி கையால் துரோணாச்சாரியா விருது பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் ... மேலும் பார்க்க

தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது

."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.குட்டையில் மிதந்த உடல்க்ர... மேலும் பார்க்க

குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு... மேலும் பார்க்க

சென்னை: பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த தம்பதி - பூட்டிய வீட்டுக்குள் பேரதிர்ச்சி!

சென்னை சென்ட்ரலிருந்து கடந்த 5-ம் தேதி டெல்லி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்துக்குச் சென்ற போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில்வே ப... மேலும் பார்க்க

ஐபோன் EMI: மலையில் இருந்து குதித்த மகன்; காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு - விபரீத முடிவெடுத்த தாய்

இன்றைய இளைய தலைமுறையிடம் மொபைல் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போன் வாங்கிக்கொடுக்கவில்லையெனில் பிள்ளைகள் மிகவும் ஆக்ரோஷமாகிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில... மேலும் பார்க்க

ஒரே பெண்ணுக்கு இருவர் போட்டி: நடுத்தெருவில் மோதிக்கொண்டதில் ஜாமீனில் வந்த ரெளடி குத்திக்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த கௌரவ் பங்கஜ் ரக்டே என்ற ரெளடியை கௌரவ் ரம்பாவ் ராவுட் என்ற ரவுடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடுரோட்டில் குத்திக்கொலை செய்துள்ளார். நாக்பூரின் மிகவும் பரபரப்பான 'க... மேலும் பார்க்க