செய்திகள் :

ஸ்நேப்சாட், வாட்ஸ்ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை; பாலிவுட் நடிகரைக் கைதுசெய்த மும்பை போலீஸ்!

post image

மும்பையில் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைக் கும்பலைக் கைதுசெய்ய போலீஸாரே ஒரு வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து போதைப்பொருள் விற்பனை செய்யும் நபரிடம் அனுப்பி வைத்தனர். அந்த வாடிக்கையாளர் போதைப்பொருள் விற்பனை செய்யும் காசிப் என்பவரை தொடர்பு கொண்டு எம்.டி எனப்படும் போதைப்பொருள் தேவை என்று தெரிவித்தார்.

காசிப் மும்பை தகிசர் செக் நாகா பகுதியில் உள்ள தாக்கூர் மால் அருகே 28 கிராம் எம்.டி. எனப்படும் போதைப்பொருளுடன் வருவதாகத் தெரிவித்தார். அந்த இடத்திற்கு போலீஸார் அனுப்பிய வாடிக்கையாளர் சென்றார்.

அந்த வாடிக்கையாளர் காசிப்பைப் பார்த்ததும் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு காசிப்பை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5.60 லட்சம் ஆகும்.

காசிப்பிடம் விசாரணை நடத்தியதில் அவர், நடிகர் ரோஹுல்லா மெஹ்தியை அடையாளம் காட்டினார். உடனே போலீஸார் மெஹ்தியைக் கைதுசெய்தனர். மெஹ்தி படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மலாடு ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்த போது அவரை மடக்கி கைதுசெய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர், புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மெஹ்தி, மும்பையில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் அவர், நடிகர் சாஹித் கபூரின் தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெஹ்திக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது... இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இப்போதைப்பொருள் விவகாரத்தில் வேறு எந்த பாலிவுட் பிரமுகருக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

அலறடித்த சத்தம்; கணவரைக் கொன்று குடலை வெளியில் எடுத்த பெண் - கண்டு அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக... மேலும் பார்க்க

கோவை : தொழிலதிபர் மாமனாரிடம் இருந்து 900 பவுன் நகைகளை திருடிய டாக்டர் மருமகன் – நடந்தது என்ன?

கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்த... மேலும் பார்க்க

`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயி... மேலும் பார்க்க

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் ... மேலும் பார்க்க

தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது

."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.குட்டையில் மிதந்த உடல்க்ர... மேலும் பார்க்க

குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு... மேலும் பார்க்க