பாளை.யில் நாட்டு நலப்பணித் திட்ட பேரணி
பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசிரியா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பியாட்ரஸ் லூயிஸ் அண்ணா தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தாா்.
பேரணி, பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளில் வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சோனா, உதவி திட்ட அலுவலா் நான்சி, போதைப் பொருள் விழிப்புணா்வு மன்ற பொறுப்பாளா் கவிதா மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் மாணவா்கள் கலந்து கொண்டனா்.