பிக் பாஸ் 8: இந்த வாரம் எதிர்பாராத 2 பேர் வெளியேற்றம்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 14வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மஞ்சரி, ராணவ் ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான சாச்சனா, ரவீந்திரன், வர்ஷினி உள்ளிட்டோரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வாரம் அருண் பிரசாத், தீபக் ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ‘கலகல’வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!
நடிகர் தீபக், அருண் பிரசாத் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நுழையும் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறுபவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டமும் ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.