பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது: அண்ணா தொழிற்சங்கம்
வரும் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்து, கடந்த 6 ஆண்டுகளாக ஊதியக் குழு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் வழங்கவில்லை என்று தெரிவித்து, போக்குவரத்துத் துறை செயலரை சந்திக்கவுள்ளாக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர். கமலகண்ணன் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்
இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டியை சென்னையில் இன்று சந்தித்து, ஊதியக் குழு பேச்சுவார்த்தை தொடர்பான மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், “வரும் பிப். 10-க்குள் ஊதியக்குழு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவிட்டால் பிப். 26 முதல் அரசுப் பேருந்துகள் இயங்காது.” என்று தெரிவித்தனர்.