செய்திகள் :

பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு!

post image

பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.

தேர்தல் வெற்றி

கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கைகளில் பின்தங்கினாலும், இறுதியாக லுலாவின் ‘தொழிலாளர் கட்சிக்கே’ (Workers Party) வெற்றியைத் தந்தது இந்தத் தேர்தல்.

லுலாவிற்கு எதிராக Liberal Party சேர்ந்த ஃபிளாவியோ போல்சோனாரோ தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், இவருடைய கட்சி 48.21 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

லுலாவின் கட்சி பெற்ற வாக்குச் சதவிகிதமோ 51.79 சதவிகிதம்.

ஃபிளாவியோ போல்சோனாரோ - ட்ரம்ப்
ஃபிளாவியோ போல்சோனாரோ - ட்ரம்ப்

ட்ரம்பின் தலையீடு

பிரேசில் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது, அந்த நாட்டையும் தாண்டி, அமெரிக்கா குறித்துப் பேச வேண்டியதாக இருக்கிறது.

அமெரிக்காவின் பக்கத்து நாடுதான் லத்தீன் அமெரிக்க நாடான இந்தப் பிரேசில். மூலப்பொருள்கள் சப்ளை, பொருளாதாரம் முதல் புவியியல் ரீதியாக பிரேசில் அமெரிக்காவிற்கு முக்கிய இடத்தில் இருக்கிறது.

முடிந்தளவிற்குத் தங்களது சாதகமாக மற்ற நாடுகளை வைத்துக்கொள்வது... முடியாவிட்டால், அந்த நாடுகளுக்குப் பல்வேறு விதங்களில் நெருக்கடி தருவது எனத் தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்வது அமெரிக்காவின் நீண்டகாலத் தெளிவான குறி.

பிற நாடுகளுக்கே இந்த நிலை என்றால், தன்னுடைய பக்கத்து நாடும் தங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் மனநிலை.

இதனால், பிரேசிலில் தங்களுக்குத் தோதான ஆட்சி அமைய வேண்டும் என்று நினைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.லுலா இடதுசாரி சிந்தனை உடையவர். மேலும், ட்ரம்ப்பின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ‘ஆமாம்’ போடாதவர். இதனால், லுலா பிரேசிலின் அதிபராகத் தொடரக்கூடாது என்று ட்ரம்ப் நினைத்தார்.

இதனால், ஃபிளாவியோ போல்சோனாரோவுக்கு ஆதரவு வழங்கினார். இவருக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைய அமெரிக்கா டிஜிட்டல் தளத்தில் பல்வேறு வேலைகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

லுலா வெற்றி
லுலா வெற்றி

லுலா பேச்சு

இதை லுலாவே தனது வெற்றிப் பேச்சில், “இது நாட்டின் எல்லைகளைக் கடந்து டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்புறத் தலையீடுகளை நாம் முறியடிக்க வேண்டியிருந்த ஒரு தேர்தலாகும்.

இந்த நாடு யாரோ ஒருவரின் பின்வாசலாக மாறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டிருந்தார். இவர் இங்கே மறைமுகமாகச் சாடியது ட்ரம்பின் அமெரிக்க அரசாங்கத்தையே.

ஆனால், ட்ரம்பின் விருப்பத்தையெல்லாம் தாண்டி, லுலாவே பிரேசில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகத் தொடர்கிறார்.

போல்சோனாரோ குற்றச்சாட்டு

இந்தத் தேர்தலில் தோல்வியை ஃபிளாவியோ போல்சோனாரோவால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அதனால், தேர்தல் தினத்தன்று பிரேசில் உச்ச நீதிமன்றம் வாக்கு நேரத்தை இரண்டு மணிநேரம் அதிகப்படுத்தியதைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபிளாவியோ போல்சோனாரோ குற்றம் சாட்டுகிறார்.

கடந்த 25-ம் தேதி, பிரேசில் தேர்தலின் போது, ‘போக்குவரத்து எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், பல வாக்காளர்கள் வாக்களிக்க வர முடியவில்லை’ என்று லுலா தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. இன்னொரு காரணமாக, அந்த நாளில் பிரேசிலில் மழை பெரிய அளவில் இருந்ததாலும் பலரால் வாக்களிக்க வர முடியவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணிநேரம் நீட்டித்தது.

இதைத் தான் ஃபிளாவியோ போல்சோனாரோ சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இது லுலாவிற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்றும் கூறுகிறார்.

லுலா வெற்றி
லுலா வெற்றி

'நானே அதிபர்..!' - போல்சோனாரோ

நேற்றுக்கூட (அக்டோபர் 28), ‘நான் தான் பிரேசிலின் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டு லுலா அரசு தேர்தலில் வெற்றிபெற அரசியல் முறைகேடுகளைச் செய்தது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஃபிளாவியோ போல்சோனாரோ.

ஆனால், இந்த அறிக்கையை அமெரிக்காவில்தான் வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்.

போல்சோனாரோ மீது ஊழல், மோசடி போன்ற புகார்கள் உள்ளன. இதனால், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதிலிருந்து தப்பிக்க, தன்னுடைய இத்தாலிய பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார் போல்சோனாரோ.

ட்ரம்ப் அரசாங்கமும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

என்னதான் போல்சோனாரோ தன்னைத் தானே பிரேசில் அதிபர் என்று அறிவித்துக்கொண்டாலும், ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட லுலா தான் பிரேசிலின் அதிபர் .

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க-வின் நிலை மிக மோசமான மாறி வருகிறது என்பதை தனது புலம்பல் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத... மேலும் பார்க்க

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்... மேலும் பார்க்க

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்ட... மேலும் பார்க்க

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ம... மேலும் பார்க்க

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை ப... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்... மேலும் பார்க்க