புகையில்லா போகியை வலியுறுத்தி ஓவியப் போட்டி
தஞ்சாவூா் தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகியை வலியுறுத்தி போகிப் புகை பூமிக்கு பகை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சுற்றுச்சூழல் கல்வித் திட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் வேதா சிறப்புரையாற்றினாா்.
ஓவியப் போட்டியில் தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசும், மஞ்சள் பையும் வழங்கப்பட்டது.
மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் பா. ராமனோகா், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சிவசுப்பிரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.