செய்திகள் :

புதிய அரசின் முதல் பட்ஜெட்... எதிர்பார்ப்பும் நிதர்சனமும்!

post image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மாற்றம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கெனவே, மாநில நிதிநிலை அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கூடுதல் கடன் சுமையை உருவாக்காமல் எந்தளவுக்கு இந்த அரசு சமநிலையைப் பேணப்போகிறது என்ற கேள்வியோடு நிபுணர்களும், வழங்கப்பட்ட வாக்குறுதி களில் எதையெல்லாம் அறிவிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியோடு மக்களும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கியிருந்தார்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்ததா என்பது மற்றுமொரு கேள்வியாகி இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவுக் கணக்கு அல்ல. நிலையான வருவாயை உருவாக்குவது முதல் பொருளாதார வளர்ச்சி வரையிலான முக்கியத் திட்டமிடல் அது. வருவாய் இல்லாமல் நலத்திட்டங்கள் நீண்டகாலம் நீடிக்க முடியாது. வருவாய் வளர, முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். முதலீடுகள் அதிகரிக்க, தொழில்கள் வளர வேண்டும். அதன் வழியாகவே வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுதான் நிலையான பொருளாதார வளர்ச்சி நிலை.

அந்தக் கோணத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளித்திருக்கலாம். மாநிலத்தின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் இந்தத் துறைக்கு கூடுதல் முதலீட்டு ஊக்கங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, சந்தை விரிவாக்கம் மற்றும் நிதி அணுகலை வலுப்படுத்தும் அறிவிப்புகள் இன்னும் இடம்பெற்றிருந்தால், அது நீண்டகால வளர்ச்சிக்கு கைகொடுத்திருக்கும்.

அதேநேரம், செயற்கை நுண்ணறிவு நகரம் உருவாக்கும் முயற்சி, ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டு நிறுவனம் போன்ற திட்டங்கள் எதிர்காலப் பொருளாதாரத்தை நோக்கிய பார்வையைப் பிரதிபலிக்கின்றன. விளையாட்டு மற்றும் இளைஞர் நலனுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதும் மனித வள மேம்பாட்டுக்கான சிறந்த அணுகுமுறை.

ஆனால், எதிர்காலத் தமிழகத்தின் பொருளாதார வெற்றியை நிர்ணயிக்கப் போவது மூன்று அம்சங்கள்தான். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம். இவற்றை மையமாகக் கொண்ட திட்டங்களே முக்கியம். நிர்வாக ரீதியில் செய்யப்படும் மாற்றங்கள், வருவாய் இழப்புகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் போன்றவை பலன் அளித்தால் மட்டுமே, வேகமாக வளரும் மாநிலம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு நிலைத்திருக்கும்.

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கு என்பது, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் விரிவாக்கம், உற்பத்தித் திறன் உயர்வு, முதலீட்டு ஈர்ப்பு மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றின் கூட்டுத்தொகைதான். இவற்றில் எதிலும் பின்தங்கிவிடாமல் செயல்பட வேண்டும் அரசு. இன்னும் காலம் இருக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று நம்புவோம்!

-ஆசிரியர்

புதுச்சேரி: இரண்டு நீதிமன்றங்களில் உறுதியான தண்டனை; ஆனாலும், முன்னாள் எம்எல்ஏ விடுதலையானது எப்படி?

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 1997 முதல் 2006-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஆனந்தன். முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக ரூ.3.75 கோடி ச... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனைக் கூட்டம்; தமிழக எம்பி-க்களை அழைக்கும் தவெக

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 8), தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்தாய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. இது சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட... மேலும் பார்க்க

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; ஒருவர் தலைமறைவு

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4... மேலும் பார்க்க

"புதுக்கோட்டை, சிவகங்கையில் கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்" - மோடிக்கு விஜய் கடிதம்

கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் விஜய் எழுதியுள்ளதாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உதயநிதி பேசியது சர்ச்சையானது. அவர் இ... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் ... மேலும் பார்க்க