செய்திகள் :

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனைக் கூட்டம்; தமிழக எம்பி-க்களை அழைக்கும் தவெக

post image

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 8), தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்தாய்வுக் கூட்டம் நடக்க உள்ளது.

இது சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்ன பிளான்?

தற்போது நாடாளுமன்றத்திலும் மழைகாலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.

ஆக, இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிக்கவே இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தமிழ்நாடு எம்.பி-க்கள் எண்ணிக்கை

மக்களவையில் தமிழ்நாட்டிற்கு 22 திமுக எம்.பிக்களும், 9 காங்கிரஸ் எம்.பிக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 எம்.பிக்களும், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தலா ஒரு எம்.பிகளும் உள்ளனர்.

மாநிலங்களவையை எடுத்துக்கொண்டால் திமுகவிற்கு 10 எம்.பிக்களும், காங்கிரஸிற்கு 3 எம்.பிக்கள், அதிமுகவிற்கு 2 எம்.பிக்கள், பாமகவிற்கு 1 எம்.பிக்களும், மதிமுக மற்றும் தேமுதிகவிற்குத் தலா ஒரு எம்.பிக்களும் இருக்கிறார்கள்.

தவெகவிற்குக் கிடைக்க இருந்த ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டையும் காங்கிரஸைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு விட்டுக்கொடுத்துவிட்டது தவெக என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டம் சக்சஸ் ஆகுமா?

கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தொகுதி மறுவரையறையைத் தீவிரமாக எதிர்த்தது திமுக. அந்த நகலை எல்லாம் எரித்து ஆர்ப்பாட்டாம் செய்தார் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனால், இப்போது 'மசோதா தாக்கல் ஆனதும், அதைப் பார்த்துவிட்டு முடிவு எடுப்போம்' என்கிற நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளது.

திமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்கிற பேச்சுகள் எல்லாம் அடிபடுகிறது.

மாநிலங்களவையில் மட்டுமே அதிமுகவிற்கு எம்.பிக்கள் இருக்கின்றனர். மேலும், அதிமுகவும், பாஜகவும் இந்த நொடி வரை கூட்டணியில்தான் இருக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
திமுக தலைவர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

ஆக, இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை திமுக எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைபாட்டையே எடுப்பார்கள் என்பது பொதுவாகத் தெரிந்ததுதான்.

ஆனால், தேமுதிக, பாமகவின் நிலைபாடு என்ன ஆகும் என்பது இனிதான் தெரியவரும்.

சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்த அனலே இன்னும் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓயவில்லை. இந்த நேரத்தில் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தைத் திமுக எப்படி எடுத்துக்கொள்ளும்? இந்தக் கூட்டம் பலனளிக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; ஒருவர் தலைமறைவு

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4... மேலும் பார்க்க

"புதுக்கோட்டை, சிவகங்கையில் கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்" - மோடிக்கு விஜய் கடிதம்

கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் விஜய் எழுதியுள்ளதாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உதயநிதி பேசியது சர்ச்சையானது. அவர் இ... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" - MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புகளைச் சாடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு வேளாண் துறையின் முன்னாள் ... மேலும் பார்க்க

TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ். அவர... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன்2026தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி,மே மாதம்13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும்,ஜூன்17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவிய... மேலும் பார்க்க