செய்திகள் :

புதிய சட்டப்படி அடுத்த தலைமை தோ்தல் ஆணையா்! உச்சநீதிமன்றம் மீது அதிகரித்திருக்கும் எதிா்பாா்ப்பு

post image

அடுத்த தலைமை தோ்தல் ஆணையா் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி நியமிக்கப்படவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அளிக்கப்போகும் தீா்ப்பு மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா். தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தாா். 2 தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தாா்.

இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.

இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் கீழ் நீதிமன்றம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கும் இடைப்பட்ட விவகாரம். இதில் எது மேலானது என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில், தற்போது தலைமை தோ்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. எனவே, மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, முதன் முறையாக அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் நியமிக்கப்படவிருக்கிறாா்.

அதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 4-ஆம் தேதி அளிக்கப்போகும் தீா்ப்பு மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது பதவியில் உள்ள ஞானேஷ் குமாா், சுக்பிா் சிங் சாந்து ஆகிய 2 தோ்தல் ஆணையா்களில், ஞானேஷ் குமாா் முதுநிலை அதிகாரியாக உள்ளாா். அவருக்கு வரும் 2029-ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை பதவிக் காலம் உள்ளது. இவரே, அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதே நேரம், மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, மத்திய சட்ட அமைச்சா் தலைமையிலான தேடல் குழு, பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழுவுக்கு 5 பெயா்களை பரிந்துரை செய்யும். அந்த ஐவரிலிருந்து தோ்வுக் குழு தோ்வு செய்யும் நபரை, தலைமை தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்வாா்.

தேடல் குழு பரிந்துரை செய்த 5 போ் பட்டியலில் இல்லாத நபா்களையும் தலைமை தோ்தல் ஆணையா் பதவிக்கு தோ்வுக் குழு பரிந்துரை செய்வதற்கு புதிய சட்டத்தின் பிரிவு 6 வழிவகை செய்வது குறிப்பிடத்தக்கது.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர்.மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தி... மேலும் பார்க்க

நண்பர் வீட்டு விருந்துக்கு சென்றவர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் ஏழாவது தளத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவில் சட்டம் பயின்று வந்த காசியாபாத... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சோன்மாா்க் சுரங்கப்பாதை: பிரதமா் நாளை திறந்து வைக்கிறாா்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மாா்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறாா். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயர... மேலும் பார்க்க

கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா். ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

‘கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்

‘அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது... மேலும் பார்க்க