செய்திகள் :

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.

சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலைதேடுவோர் மற்றும் வேலை அளிப்போரை டிஜிட்டல் முறையில் இணைக்க பொது மையம் அமைக்கப்படும். உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த முதல்வர் உள்ளாட்சி வளர்ச்சி பாதை திட்டம் அறிமுகமாகிறது.

பொதுமக்கள், எம்.எல்.ஏ-க்கள்  பரிந்துரை அடிப்படையில் ரூ.1,131 கோடி மதிப்பீட்டில் 2,282 பணிகள் கொண்ட விரிவான ஐந்தாண்டு திட்டம் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் படிப்படியாக தொகுதிவாரியாக செயல்படுத்தப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் சாலையோர உணவு மையம் அமைக்கப்படும்.

புதுச்சேரி அரசு

மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவசமாக டேப் (கையடக்க கணினி) இந்த நிதியாண்டு முதல் தரப்படும். 16,250 பேர் பயன்பெறும் இந்தத்  திட்டத்துக்கு ரூ.16.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி தரப்படும்.

அதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 6.46 கோடி செலவு ஏற்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.35,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை மகளின் திருமண நிதியுதவி ரூ.40,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக நடப்பு நிதியாண்டில் உயர்த்தி தரப்படும். புதுச்சேரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.3,000 மதிப்புள்ள பரிசுத் தொகுப்பு தரப்படும். பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம் அமைக்கப்படும். கப்பல் பயணிகளுக்கான வசதி ஏற்படுத்தப்படும்.

கடல்வழி நீர்வழி தயாரிக்கப்படும். காரைக்காலில் ரூ.80 கோடியில் நவீன மாவட்டச் சிறைச்சாலை அமைக்கப்படும். புதுச்சேரியில் 1,000 டி.டி.எஸ் மேல் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ள இடத்தில் 50 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், ஏரிகளைச் சீரமைக்கவும் ரூ.497 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 125 நாள் வேலைத் திட்டத்தில் 20 லட்சம் வேலை நாட்கள் உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். சிறந்த அரசப் பள்ளிகளில் அதிநவீன நூலக வசதி ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் விரிவான கல்வி தொழில்நுட்ப திட்டம் அறிமுகமாகும். இதில் செயற்கை நுண்ணறிவு கற்றல் தளம், மெய்நிகர் ஆய்வகம் அமையும்.

அனைத்து அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எரிப்பான் அமைக்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் மருத்துவ சேவை அறிமுகமாகும். நீண்டகால நோய் பாதிக்கப்பட்டோரை பராமரிக்க தன்னார்வலர்கள் மூலம் நோய் தணிப்புப் பேணல் திட்டம் அறிமுகமாகிறது. அரசு தனியார் பங்களிப்புடன் வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். அவை புதுச்சேரியில் இருந்து சென்னை, பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் இயக்கப்படும்" என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க