செய்திகள் :

புதுச்சேரி: `ஷார்ட்ஸ்’ அணிந்த பெண்களுக்குத் தடை; வேட்டி கட்டிய பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி!

post image

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். அதனால் புதுச்சேரிக்கு வரும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தவறாமல் அங்கு சென்று விநாயகரை தரிசித்துச் செல்வார்கள். புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் உடையில் நகரைச் சுற்றிப் பார்ப்பார்கள். அப்படியே அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். அதன்படி நேற்று பெங்களுருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்றனர். அவர்களில் இரண்டு பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்திருந்தனர்.

வேட்டி அணிந்த பெண்கள்

அதனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், அவர்களுடன் வந்த பெரியவர்கள் மற்றும் ஒரு பெண்ணின் கணவரை மட்டும் அனுமதிப்போம் என்றனர் கோயில் ஊழியர்கள். ஆனால் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்கள் கோரிக்கை வைத்ததால், வேட்டி அணிந்துகொண்டு வந்தால் அனுமதிப்போம் என்றனர் கோயில் ஊழியர்கள்.

அதையடுயடுத்து அங்கிருந்த கடையில் வேட்டியை வாங்கி அந்தப் பெண்கள், ஷார்ட்ஸ் மீது அணிந்துகொண்டனர். அதையடுத்து கோயிலுக்குள் சென்று அவர்கள் தரிசனம் செய்தனர். மணக்குள விநாயகர் கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவது குறித்து அங்கு எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை. இதுவரை அங்கு அப்படி கடைப்பிடிக்கப்பட்டதும் இல்லை. அதனால் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி கடற்கரை சாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் | Photo Album

விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சி... மேலும் பார்க்க

'மீனாட்சி சுந்தரேஷ்வரா...' கோஷத்துடன் நடந்த குடமுழுக்கு; நன்னீரால் குளிர்ந்த மதுரை மாநகரம்!

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கடைசியாக 08.04.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலில் உள்ள அனைத்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு; விழாக் கோலம் பூண்ட மதுரை!

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக 4.5 டன் வண்ண மலர்களால் மலர் மாலைகள் தயாரிக்கப்பட்ட நிலையில் நேற்... மேலும் பார்க்க

மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டி!

மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டியில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கண்ணைக் கவரும் வகையில் குழந்தைகள் பங்கேற்றனர்.இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில்... மேலும் பார்க்க

ஓணம்: சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் படிபூஜை; அத்தப்பூ கோலம், ஓண சத்ய காட்சிகள்! | Photo Album

நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்; வழக்குகளில் வெற்றி அருளும் தலம்! மேலும் பார்க்க

திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா; தமிழக அரசு மரியாதை; ஞானத்திருவளாகம் உருவான வரலாறு!

ஆன்மிகப் பணியோடு இணைந்து மிகச்சிறப்பான முறையில் தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121 பிறந்தநாள் விழா, வேலூர் காங்கேயநல்லூரில் உள்ள அவரின் ஞானத்திருவளாகத்தில் இன்று கொண... மேலும் பார்க்க