செய்திகள் :

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

post image

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு அருகிலிருக்கு சாலை என்பதாலும், வார இறுதி நாள் என்பதலும் நேற்று காலை படு பிஸியாக இருந்தது அந்தப் பகுதி.

சுமார் 10 மணியளவில் அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தீயணைப்புத் துறை அலுவலகத்தின் வாசலில் இருந்த மரத்தில் ஏறி சுமார் 100 அடி உயரத்தில் அமர்ந்து கொண்டார். அத்துடன் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் இந்தி மொழியில் கூச்சல் போட்டு வம்பிழுத்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ந்துபோன தீயணைப்பு வீரர்கள், அவரைக் கீழே வருமாறு அழைத்தனர். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அவர், மரக்கிளைகளைப் பிடித்து வேகமாக ஆட்டினார். இதற்கிடையில் ஒதியஞ்சாலை போலீஸாரும், அங்கு வந்து அவரை இறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

அவர் எப்போது வேண்டுமானாலும் அங்கிருந்து கீழே விழலாம் என்ற நிலை ஏற்பட்டதால் கீழே வலையை விரித்த தீயணைப்பு வீரர்கள், மரத்தின் மீது ஏறி அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர் அவர்கள் மீது சிறுநீரைக் கழித்ததால், தொடர்ந்து மேலே ஏற முடியாமல் கீழே இறங்கினர்.

அதையடுத்து அங்கு வந்த தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன், இந்தி மொழியில் பேசி அந்த இளைஞரைக் கீழே வருமாறு அழைத்தார்.

கயிறு மூலம் மீட்கப்பட்ட இளைஞர்
கயிறு மூலம் மீட்கப்பட்ட இளைஞர்

ஆனால் அதற்கும் அந்த இளைஞர் கட்டுப்படவில்லை. அத்துடன், `எனக்கு 4 ஃபுல் பாட்டில் விஸ்கி வேண்டும். அதுகூட ரூ.4 கோடி பணம் வேணும். அப்போதான் கீழே வருவேன்’ என்று அடம்பிடித்தார்.

அதையடுத்து அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த மற்றொரு வடமாநில இளைஞர் ஒருவரை பேச்சுவார்த்தை நடத்துவது போல ஏணி மீது ஏற்றி, அந்த இளைஞரின் காலை கயிற்றால் கட்ட வைத்து, அடம்பிடித்த இளைஞரைப் பத்திரமாக மீட்டனர்.

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தூய சக்... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: இந்தியாவைப் பாராட்டும் புதின்; இந்தியாவின் திட்டத்திற்கு உக்ரைன் 'டிக்'; என்ன நடந்தது?

உலக நாடுகளுக்கு இடையே ‘நடுநிலை’ என்பதற்கு எப்போதுமே இந்தியாவிற்குத் தனிப்பெயருண்டு... சிறப்புண்டு.இது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.இந்தியாவின் நிலைப்பாடே ‘... மேலும் பார்க்க

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி: ஒரு மாத வித்தியாசம்; ஆறு மாதப் போராட்டம் - ஆதார் பிழையால் தவிக்கும் மாணவி!

“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள... மேலும் பார்க்க

`டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!' – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு?

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுரும்பத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, விபத்துக... மேலும் பார்க்க