செய்திகள் :

புத்தகத்தில் இல்லாத வாழ்க்கைப் பாடம்! – சமூகச் சேவையில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர் நெகிழ்ச்சி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

 ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். “பாடப்புத்தகத்தில் இல்லாத ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எங்கே செல்ல வேண்டும்?” 

மாணவர்கள் பல்வேறு பதில்களைக் கூறினர்.

நூலகம் செல்ல வேண்டும். 

இணையத்தில் தேடவேண்டும். 

ஆசிரியரிடம் கேட்க வேண்டும். அப்போது நான் சொன்னேன்.

“சமூகத்திற்குள் செல்லுங்கள், அங்கே வாழ்க்கை உங்களுக்குப் பாடம் நடத்தும்!”.

அந்த எண்ணத்திலிருந்துதான் மாணவர்களோடு இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடும் பயணம் தொடங்கியது.

அதுதான்

“மாணவ தன்னார்வ இயக்கம்.”

மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மட்டும் இருக்கக் கூடாது. அவர்கள் மனிதர்களாக வளர வேண்டும். பிறருடைய பசியை உணர வேண்டும். துயரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். சமூகத்தின் தேவைகளுக்கு தங்களால் இயன்ற அளவு துணை நிற்க வேண்டும்.

இந்த எண்ணத்தையே மாணவர்களிடம் விதைப்பதே மாணவ தன்னார்வ இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

ஒரு உணவு பொட்டலம் கற்றுக் கொடுத்த பாடம்.

சாலையோரத்தில் வாழும் ஒருவரிடம் உணவை வழங்குவதற்காக மாணவர்களோடு சென்றிருந்தோம். உணவுப் பொட்டலத்தை வாங்கிய அந்த மனிதர், சில நொடிகள் மாணவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மெதுவாக சிரித்தார். அந்தச் சிரிப்பு மாணவர்களை அமைதியாக்கியது. அன்று வகுப்பறையில் நான் எந்தப் பாடத்தையும் நடத்தவில்லை. ஆனால் மாணவர்கள் ஒரு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.

பசியைத் தீர்ப்பது உணவு வழங்குவது மட்டுமல்ல, ஒருவரை மனிதராக மதிப்பதும்கூட. அந்த நாளிலிருந்து உணவைப் பகிர்வது அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி அல்ல, ஒரு பொறுப்பாக மாறத் தொடங்கியது.

இல்லம் தேடும் இளைய உள்ளங்கள்.

முதியோர் இல்லங்களுக்குச் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் முகத்தில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருக்கும். அவர்களிடம் என்ன பேசுவது?

என்ற கேள்வி இருக்கும். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் மறைந்து விடும். ஒரு மாணவன் ஒரு முதியவரிடம் பேசுவான். மற்றொருவன் உணவு வழங்குவான். இன்னொருவன் அவர்களுடைய தேவைகளை விசாரிப்பான். சிலர் அமைதியாக அமர்ந்து அவர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்பார்கள். அப்போது மாணவர்களுக்கு ஒரு உண்மை புரியும். வயதானவர்களுக்கு உணவு மட்டும் தேவையில்லை.

அவர்களுக்குத் தேவைப்படுவது உறவின் வெப்பமும் அன்பின் அரவணைப்பும். அதனால் முதியோர் இல்லங்களுக்கு நாம் எடுத்துச் செல்வது உணவுப் பொருட்களை மட்டும் அல்ல. நீங்கள் தனியாக இல்லை. உங்களோடு பேசுவதற்கும் உங்களை நினைப்பதற்கும் சில இளம் உள்ளங்கள் இருக்கின்றன. என்ற நம்பிக்கையையும்.

மரம் நடுவது மட்டும் போதாது!

மாணவர்களோடு மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால் நான் மாணவர்களிடம் எப்போதும் சொல்வது ஒன்றுதான். மரக்கன்று நடுவது புகைப்படத்திற்காக அல்ல. எதிர்காலத்திற்காக. ஒரு மரக்கன்றை நட்டு விட்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்றுவிடுவது சுற்றுச்சூழல் சேவை அல்ல. அதைப் பாதுகாப்ப வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். அது வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். அது மரமாக மாறும் வரை அதன்மீது அக்கறை செலுத்த வேண்டும். அதனால்தான் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் மாணவர்களிடம் ஏற்படுத்துகிறோம். பனை விதைகள் விதைத்தல் போன்ற பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறோம். இன்று நாம் விதைக்கும் ஒரு விதை, நாளைய ஒரு தலைமுறைக்கு நிழலாக மாறும்.

உதவி என்பது ஒரே வடிவத்தில் இருப்பதில்லை. சமூகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தேவை.

ஒரு மாணவனுக்கு பள்ளிப் பொருட்கள் தேவைப்படலாம்.

மற்றொருவருக்கு கல்விச் செலவுக்கான உதவி தேவைப்படலாம்.

ஒரு மாற்றுத்திறனாளிக்கு உதவி உபகரணம் தேவைப்படலாம்.

ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவைப்படலாம்.

மற்றொரு குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் பொருட்கள் தேவைப்படலாம். அவர்களின் தேவையை அறிந்து, இயன்ற அளவில் உதவிக்கரம் நீட்டுகிறோம். ஆனால் மாணவர்களிடம் நான் வலியுறுத்துவது

“உதவி செய்யும்போது ஒருவரின் சுயமரியாதையைப் பாதுகாத்தேஉதவ வேண்டும்.”

உதவி பெறுபவரைத் தாழ்வாக உணரச் செய்வது உதவி அல்ல. அவரை நிமிர்ந்து நிற்கச் செய்வதே உண்மையான உதவி. ஒரு வார்த்தையும் வாழ்க்கையை மாற்றலாம். சமூக சேவை என்றால் உணவு வழங்குவதும் பொருட்கள் வழங்குவதும் மட்டுமல்ல. ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில் கூறப்படும் ஒரு வார்த்தையும் சமூகச் சேவைதான்.

“உன்னால் முடியும்”

தோல்வி உன் வாழ்க்கையின் முடிவு அல்ல!

படிப்பை விடாதே!

உன் சூழ்நிலை உன் எதிர்காலத்தை முடிவு செய்யாது!

இத்தகைய வார்த்தைகள் சில நேரங்களில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, ஒழுக்கம், தலைமைப் பண்பு, சமூகப் பொறுப்பு போன்றவற்றிலும் வழிகாட்ட முயற்சிக்கிறோம்.

மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்பது ஒரு பாடம் அல்ல. நான் மாணவர்களோடு சேவைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டே செல்ல விரும்புவதில்லை. அவர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஒரு முதியவரின் கண்களைப் பார்க்கட்டும்.

ஒரு பசியான மனிதனின் கையைப் பார்க்கட்டும்.

ஒரு வறுமையான குடும்பத்தின் வாழ்க்கையைப் பார்க்கட்டும்.

ஒரு மரக்கன்றின் வளர்ச்சியைப் பார்க்கட்டும்.

ஒரு உதவி பெற்ற மாணவனின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியைப் பார்க்கட்டும்.

அந்தக் காட்சிகளே அவர்களுக்கான மிகப்பெரிய பாடப்புத்தகங்கள்.

அனுபவத்தால் கற்றுக்கொள்ளும் மனிதநேயம் வாழ்நாள் முழுவதும் மறக்காது.

“நான்” என்பதிலிருந்து “நாம்” வரை

மாணவ தன்னார்வ இயக்கம் மாணவர்களின் சிந்தனையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனக்கு என்ன? என்ற கேள்வி மாறி, நம்மால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி பிறக்க வேண்டும்.

ஒரு மாணவன் உணவு வழங்கலாம்.

ஒருவன் மரக்கன்று நடலாம்.

ஒருவன் முதியோர் இல்லத்திற்குச் செல்லலாம்.

ஒருவன் கல்வி உதவி செய்யலாம்.

ஒருவன் இரத்த தானம் செய்யலாம்.

ஒருவன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.

ஒருவன் இன்னொரு மாணவனுக்கு வழிகாட்டலாம்.

செயல்கள் வேறுபட்டாலும், நோக்கம் ஒன்றுதான்.

சமூகத்திற்கு நம்மால் இயன்றதைச் செய்வது.

சேவை செய்த மாணவர்கள் மாறுகிறார்கள்.

மாணவர்களோடு சமூகப் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் நான் ஒரு மாற்றத்தைப் பார்க்கிறேன். முதலில் தயக்கத்தோடு வந்த மாணவன், சில நாட்களுக்குப் பிறகு தானாகவே சேவை செய்ய முன்வருகிறான்.

முதலில் “யார் உதவி செய்வார்கள்?” என்று கேட்டவன், பின்னர் “நாம் என்ன உதவி செய்யலாம்?” என்று கேட்கத் தொடங்குகிறான்.

இதுதான் இந்த இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி.

மாணவர்களின் கைகளில் பொருட்களை மட்டும் கொடுக்கவில்லை. சமூகப் பொறுப்பையும் கொடுக்கிறோம்.

ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும்.

என்னுடைய கனவு, நான் மட்டும் சமூக சேவை செய்வது அல்ல.

நான் செய்த சேவையைப் பார்த்து இன்னொரு மாணவன் சேவை செய்ய வேண்டும்.

அவனைப் பார்த்து இன்னொரு மாணவன் முன்வர வேண்டும். இவ்வாறு ஒரு மாணவனிடமிருந்து பத்து மாணவர்கள். பத்து மாணவர்களிடமிருந்து நூறு மாணவர்கள். நூறு மாணவர்களிடமிருந்து ஒரு தலைமுறை. அந்தத் தலைமுறைதான் நாளைய சமூகத்தின் முகமாக இருக்கப் போகிறது. எனவே மாணவ தன்னார்வ இயக்கம் என்பது ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான அமைப்பு அல்ல, நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி.

வகுப்பறையின் கதவு திறக்கட்டும்!

மாணவர்கள் வகுப்பறையில் படிக்க வேண்டும். ஆனால் வகுப்பறையிலேயே முடங்கிவிடக் கூடாது. சமூகத்திற்குள் செல்ல வேண்டும். மனிதர்களைப் பார்க்க வேண்டும். அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும். அப்போதுதான் கல்வி முழுமை பெறும்.

புத்தகம் அறிவைத் தரும்.

அனுபவம் புரிதலைத் தரும்.

சேவை மனிதநேயத்தைத் தரும்.

இந்த மூன்றும் இணைந்தால்தான் முழுமையான மனிதன் உருவாகிறான். அதனால்தான் மாணவர்களோடு நான் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

பசியோடு இருப்பவருக்கு உணவு..

தனிமையில் இருப்பவருக்கு அன்பு..

தேவைப்படுபவருக்கு உதவி..

தடுமாறுபவருக்கு வழிகாட்டுதல்..

நம்பிக்கை இழந்தவருக்கு ஒரு நம்பிக்கை வார்த்தை..

இதுவே எங்களது பயணம்.

இதுவே மாணவ தன்னார்வ இயக்கத்தின் கனவு.

“ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெறுவது அவனது வெற்றி”

“ஒரு மாணவன் நல்ல மனிதனாக மாறுவது சமூகத்தின் வெற்றி”

அந்த சமூக வெற்றியை நோக்கி, மாணவர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறது. - மாணவ தன்னார்வ இயக்கம்.

-ஆசிரியர் பா.நூருல்லாஹ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ரீல்ஸ் பார்ப்பதும் ஒரு முதலீடா? – வாழ்க்கையை ஜெயிக்க உதவும் எளிய 'CAKE' ஃபார்முலா!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சமூகத் தடைகளை உடைத்து சாதித்த பெண் சிங்கம்! – இந்தியப் பெண் சமூகத்தின் விடியல்

பெண்கள் உயர்கல்வி பெறுவதும், மருத்துவம் பயில்வதும் அரிதாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சமூகத் தடைகளை எதிர்கொண்டு கடந்து, மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பெண் கல்வி, பெண் தொழிலாளர் ந... மேலும் பார்க்க

காமராஜரின் நிர்வாக மாண்பு முதல் இன்றைய 110 அறிவிப்புகள் வரை! – தமிழ்நாடு சட்டமன்றத்தின் குரல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உறியடியின் தோற்றமும் சுவாரஸ்யமான விதிகளும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் விதி... என் பேரரசு! – தன்னம்பிக்கைக் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாலைகள் வேண்டும்... ஆனால் நிலம் தர மாட்டோம்! – வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது நாமும்தானா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க