செய்திகள் :

டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ்

post image

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அகோஜம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர். கூட்டங்கள் அல்லது சந்திப்பு என்று கூறி மாணவிகளை பல்கலைக்கழக வளாக குடியிருப்புக்கு அழைத்துப் பாலியல் துன்புறுத்ததலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் வகுப்பில் ஆபாசமான மற்றும் தகாத கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் சிலர் குற்றம் சாட்டினர். அதோடு தன்னுடன் உறவு வைத்துக்கொண்டால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று அவர் கூறியதாகவும் அம்மாணவிகள் தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம்
காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம்

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் உள்மட்டத்தில் குழுவை அமைத்தது. அதன் விசாரணை அறிக்கை அடிப்படையில் பேராசிரியர் அகோஜம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் வெளியிட்ட உத்தரவில், ''பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜமுக்கு எதிராக உள் குழு (ஐசி) விசாரணை நடத்தியது. இதில் உள் குழு (ஐசி) பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமுக்குப் பெரும் தண்டனை வழங்க பரிந்துரைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, மற்றும் உள் விசாரணை குழுவின் அறிக்கையின்படி, பல்கலைக்கழகத்தின் சேவைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறார். பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீதான தண்டனை உடனடியாக அமலுக்கு வரும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அகோஜம் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கட்டப்பஞ்சாயத்து மூலம் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை என்னை துன்புறுத்தப்படுவதாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணைக்குழுவின் கண்டுபிடிப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது துன்புறுத்தலைத் தவிர வேறில்லை. பல்கலைக்கழகம் அதன் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கிறது'' என்று குற்றம் சாட்டினார்.

பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பிரச்னையை பா.ஜ.க மகளிரணி கையில் எடுத்துள்ளது. அகோஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மகளிர் அணியினர் காங்கிரஸ் தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டக்காரர்கள் அகோஜம் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு... மேலும் பார்க்க

"மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?" - தவெக அரசுக்கு சீமான் கேள்வி

தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தவெக அரசுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

அரிசி முதல் காய்கறி வரை.! - திடீர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? அரசு என்ன செய்ய வேண்டும்?

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய்,... மேலும் பார்க்க

"ஒருவேளை வந்தால் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள்" - பாஜக தலைவருக்கு முதல்வர் சிவக்குமார் பதிலடி

கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தற்போதும் அது போன்ற ஒரு முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் சிவக்குமா... மேலும் பார்க்க

டெல்லி: 1993 முதல் 2026 வரை ! - ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முக்கிய போராட்டங்கள் என்னென்ன?

SIR விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை மத்திய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் ஜந்தர் மந்தர் பகுதியை... மேலும் பார்க்க

``சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்!"- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தத... மேலும் பார்க்க