செய்திகள் :

பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா... பொள்ளாச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் செய்த அசிங்கம்!

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்துவதற்காக தனி கழிப்பறை உள்ளது. பெண் செலிவியர் ஒருவர் நேற்று அந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பேனா வடிவிலான கேமரா ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  உடனடியாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

வெங்கடேஷ்

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33) என்பவர் தான் கழிப்பறையில் பேனா வடிவிலான ரகசிய கேமராவை வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“வெங்கடேஷ் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்எஸ் ஆர்தோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்றபோது சக ஊழியர்களுடன் இணைந்து வெங்கடேசும் கழிப்பறையில் சென்று பார்த்துள்ளார்.

அவர் அந்தக் கேமராவில் இருந்து மெமரி கார்டை எடுத்துள்ளார். இதனால் போலீஸ் சந்தேகமடைந்து விசாரணை நடத்தியபோது, வெங்கடேஷ் தான் குற்றவாளி என தெரியவந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு அமேஸான் தளத்தில் பேனா வடிவிலான கேமராவை வாங்கி, பிறகு சுத்தம் செய்யும் பிரஷ் ஒன்றில் லப்பர் பேண்ட் வைத்து சுற்றி அங்கு வைத்துள்ளார்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம்

மாற்றுத்திறனாளியான வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார்.

அவருக்கு திருணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனியார் மருத்துவமனையிலும் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அதனால் அங்கும் ஆய்வு நடத்தியுள்ளோம்.

வெங்கடேஷிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி: `புரோட்டாவில் நெஞ்சு முடி; ஹோட்டலை மூடு'- வம்படியாக பஞ்சாயத்து; நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், பாக்கியலட்சுமி. இவர்கள் அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயில் அருகே பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்குச் சென்ற அதே பகுதிய... மேலும் பார்க்க

திருவாரூர்: `ஹோட்டலில் சாப்பிட 2,500 அனுப்புங்க' - நகராட்சி ஆணையரிடம் ரூபாய் 10,000 மோசடி செய்த நபர்

திருவாரூர் நகராட்சி ஆணையராக பணியாற்றியிருப்பவர் தாமோதரன். இவரது செல்போன் எண்ணிற்கு (04.12.2024) அன்று புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனை நகராட்சி ஆணையர் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் பே... மேலும் பார்க்க

மதுவால் வந்த வினை; 4 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை - ஈரோட்டில் நடந்தது என்ன?!

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவரது மனைவி சுகன்யா. இத்தம்பதிக்கு 7வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைச்செல்வன் அடிக்கடி மது... மேலும் பார்க்க

சென்னை: அழகுகலை நிபுணர் மர்ம மரணம் - ஆண் நண்பரிடம் போலீஸ் விசாரணை!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் கடந்த 5- ம் தேதி சென்னை வந்தார். அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான சென்னை, சூளைமேடு சண்முகம் சாலை பகுதியில் வசித்து வரும் முகமதுவை (31) இளம்பெண் சந்தித்தார். ப... மேலும் பார்க்க

சென்னை: பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அறிவழகனைச் சுட்டுப் பிடித்த போலீஸ்; நடந்தது என்ன?

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 5 வது தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (24). இவர் மீது தி.மு.க பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5 ஆண்ட... மேலும் பார்க்க

கோவை: மகளிர் குழு மூலம் வலை; பணம் கொடுத்து காத்திருந்தவருக்கு கட்டு கட்டாக காகிதம் கொடுத்து மோசடி

கோவை மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி. மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகிறார். சுகந்தி மகளிருக்கு தொழில் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுக்கும் பணிக... மேலும் பார்க்க