செய்திகள் :

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

post image

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய வழி வகுத்த மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்திலிருந்து 'விடியல்' என்கிற வார்த்தை தூக்கப்பட்டு விட்டது.

அந்த வரிசையில் தற்போது நியாய விலைக் கடைகள் மூலம் முதியவர்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொருள்கள் வழங்கி வந்த 'தாயுமானவர்' திட்டத்தின் பெயரையும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறையிலிருந்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆகஸ்ட் மாதத்திலிருந்து 'தாயுமானவர்' திட்டம் 'வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சிலரிடம் பேசிய போது,

''இப்போதைய முதலமைச்சர் தேர்தலுக்கு முன் புதுச்சேரியில் பிரசாரத்தில் பேசியபோது அங்குள்ள ரேஷன் சிஸ்டம் குறித்துப் பேசினார். அதேபோல முதலமைச்சராகப் பதவியேற்ற அந்த மேடையிலும் பல துறைகளிலும் சீர்திருத்தங்களை மேற்கோள்ளவிருப்பதாகப் பேசியபோது ரேஷன் குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார். ஜெயிச்ச பிறகு முதன் முதலா தொகுதிக்கு வந்தப்ப கூட ஒரு ரேஷன் கடைக்கு விசிட் வந்தார்.

இதையெல்லாம் பாக்குறப்ப எழை மக்களுடன் தொடர்புடைய பொது விநியோகத் திட்டத்தின் மீது அவர் ரொம்ப கவனம் செலுத்துவார்னு தோணுது.

இதுல‌ உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதேநேரம் பொதுவிநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தறதுல முதல் படியில நிற்குற நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குக் காலங்காலமா இருக்கிற பிரச்னைகள்லயும் முதலமைச்சர் கவனம் செலுத்தணும்.

TVK Vijay
TVK Vijay

இப்ப இருக்கிற ரேஷன் பணியாளர்கள் எல்லாருமே ஒரே வேலையைத்தான் செய்றாங்க. ஆனா உணவு வழங்கல் துறை கட்டுப்பாட்டில் வருகிற ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கூட்டுறவுத் துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களூக்கும் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருக்கு.

அதாவது கூட்டுறவுத் துறை ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் சூழலில் விற்பனையாளர்கள் இயற்கை உபாதைகளைகளுக்கு ரொம்பவே சிரமப்படுகின்றனர்.

எனவே கழிவறை வசதியுடன் சொந்தக் கட்டிடத்தில் நியாயவிலைக் கடை இயங்க நடவடிக்கை தேவை. ரேஷன் சீர்திருத்தம் செய்ய முன்வரும்போது எங்களுடைய இந்தக் கோரிக்கைகளையும் முதலவர் கனிவுடன் பரிசீலிக்கணும்'' என்கின்றனர்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க