செய்திகள் :

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

post image

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited), தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது. அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை' ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு வழக்கு

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (S.I.T) அமைத்தார் ஆளுநர் கைலாஷ்நாதன். அந்தக் குழு, மதுரை ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, அவர்களின் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.

அப்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த முன்னாள் சபாநாயகர் செல்வத்திற்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தின எதிர்க்கட்சிகள். அதன்பிறகு என்ன காரணத்தாலோ வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றினார் ஆளுநர் கைலாஷ்நாதன். சிறைக்குச் சென்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். அதன் பிறகு அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி புதுச்சேரி வந்த சி.பி.ஐ அதிகாரிகள், ஜாமீனில் வெளிவந்திருந்த முக்கியக் குற்றவாளி மதுரை ராஜாவை மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போலி மருந்துகள்

`சி.பி.ஐ விசாரணையை முடக்குவதற்காக டெல்லி காவல்துறை அதிகாரிகளிடம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் ராஜா. அதனால் அவருடன் டெல்லி காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், ஐ.பி.எஸ் அதிகாரி தீபக் கஹ்லாவத்  உள்ளிட்ட பலரைக் கைது செய்திருக்கிறோம்' என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

இது ஒருபுறமிருக்க, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 'கியூ' பிராஞ்ச் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, `பிரிகாபலின் 150' (Pregabalin 150 mg) மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரித்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பிரபாகரன்

அதன்பேரில், புதுச்சேரி அடுத்த குருமாம்பேட்டில் இயங்கி வந்த 'மெடினோக் ஹெல்த் கேர்' (Medinok Healthcare Private Limited) என்ற நிறுவனத்தில் கடந்த 14-ம் தேதி, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போலீஸார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அங்கு போலி மருந்து தயாரிக்கப்பட்டது உறுதியானதால், அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

அதையடுத்து விழுப்புரம் மாவட்டம், பூத்துறை பகுதியில் அவர் நடத்தி வந்த குடோனில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்த அந்த குடோனில் போலியாக தயாரிக்கப்பட்ட 625 வகையான மருந்துகள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள். அதையடுத்து அங்கு தொடர்ச்சியாக மூன்று நாள்கள் ஆய்வு செய்த அதிகாரிகள், அனைத்து வகையான போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப் பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ததுடன், குடோனுக்கு சீல் வைத்தனர். கடந்த 2025-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலைகள் வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது.

காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன்

தற்போது இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவருக்கு முன்பு, சுகாதாரத்துறை செயலராக இருந்த முகமது யாசின் மிசோராமுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பித்தக்கது.

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க