செய்திகள் :

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

post image

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம்,  மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மூத்த மகளின் திருமணச் செலவிற்காக பிரேமா சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கலையரசியிடம் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டி தொகையை உடனடியாகத் தராவிட்டால் ஆடையைக் கலைந்துவிட்டுவிடுவேன், உயிருடன் விடமாட்டோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரேமாவின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களை அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரசு இராஜாஜி மருத்துவமனை சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரேமா
பிரேமா

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைய  செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பதி, கலையரசி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய 4 பேர் மீது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு  மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விளக்குத்தூண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய பிரேமாவின் கணவர் மற்றும் உறவினர்கள், 2 லட்சம் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு டார்ச்சர் பண்ணியுள்ளனர். கலையரசி, திருப்பதியிடம் 4% வட்டிக்கு வாங்கி அதனை 20% வட்டி எனக் கூறி பிரேமாவிற்கு வழங்கி தினசரி சம்பளத்தைப் பெற்றுள்ளார். நாங்க கஷ்டப்பட்டு உழைச்ச காசெல்லாம் வட்டில போச்சு 4 நாளா வட்டிகட்டாததுனால ஆபாசமாகப் பேசி சேலையை உருவிருவேன் என மிரட்டியதால் விஷம் குடிச்சு செத்துட்டாங்க.

கந்துவட்டி கொடுமை

மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி மீட்டர் வட்டி கொடுக்குறாங்க. அதனால அங்குள்ள தொழிலாளர்களும் மீட்டர் வட்டிக்கு வாங்கி நாள்தோறும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறாங்க. 

கந்து வெட்டி கேட்டு கலையரசி, திருப்பதி உள்ளிட்டோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் பிரேமா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட தனது சம்பளத்தை எல்லாம் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் கூட குடும்பத்தோடு பசியோடு இருந்தோம். வட்டிக்கு மேல வட்டி கேட்டதுனால பிரேமா விஷ அருந்தி உயிரிழந்து விட்டார்.

இப்போது வாடகை கூட கட்ட முடியாமல் குடும்பமே தவித்து நிற்கிறோம். உணவுக்குக் கூட வழி இல்லை. அரசு எங்களது குடும்பத்தினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மனைவியின் தற்கொலைக்குக் காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க