செய்திகள் :

மாணவர்கள் போரட்டம்: மூக்கில் ரத்தம்; குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! - என்ன நடந்தது?

post image

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, டெல்லி 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாலை 3 மணியளவில் வாழ்த்துகளைத் தெரிவித்து முடித்ததும், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதல், அதையும் கடந்த மாணவர்களின் போராட்டம் என டெல்லி பரபரப்பாக இருக்கும் நிலையில், ``வாருங்கள், இந்தப் பிரச்சினையில் பிரதமரைத் தட்டி எழுப்புவோம். அவரது இல்லத்திற்குச் செல்வோம்" என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்து, போராட்டத் திட்டத்தை அறிவித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் 'இந்தியா' கூட்டணியின் முக்கியப் பிரதிநிதிகள் பிரதமர் இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். கார்கேவின் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் அருகே தலைவர்கள் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்புப் படையினர் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.

இந்த எதிர்பாராத திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு, நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோரை போராட்ட இடத்திற்கு அனுப்பி வைத்து, நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றும், போராட்டத்தைக் கைவிடுமாறும் அவர்கள் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மாலை 6:25 மணியளவில் டெல்லி துணைப் போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, மாலை 6:40 மணியளவில் காவல்துறையினர் பலவந்தமாகக் கைது நடவடிக்கையில் இறங்கினர். ராகுல் காந்தியைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது மூக்கில் காயமும், கண் மற்றும் நெஞ்சுப் பகுதியில் லேசான காயங்களும் ஏற்பட்டன. ராகுல் காந்தியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைப் பேருந்திற்குள் தள்ள முயன்றபோது, அவர் கதவைப் பிடித்துக்கொண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் பேருந்தின் ஜன்னல் வழியாக "மோடி ஒரு கோழை", "சர்வாதிகாரம் செல்லாது" என்று அவர் முழக்கமிட்டார். கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி மாடல் டவுனில் உள்ள சத்ரசால் மைதானத்திற்கும், பிரியங்கா காந்தி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகளால் தங்களது போராட்டம் தொய்வடையாது என்றும், புதன்கிழமை நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்குவதை அரசு உறுதி செய்துவிட்டதாகவும் காங்கிரஸ் ஆவேசமாக அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி கைது குறித்து தவெக-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - என்ன சொல்கிறார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லி... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: ``அனைத்தும் நியாயமான கேள்விகள்" - கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை மக்களவைச் சபாநாயகரைச் சந்தித்துப் பே... மேலும் பார்க்க

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க