செய்திகள் :

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" - பும்ரா மனைவி கண்டனம்|live Updates

post image

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 20-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியைத் தடுக்க முயன்ற டெல்லி போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இந்தச் சம்பவத்தில் பல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், 6 வயது சிறுவன் ஒருவரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல விளையாட்டு தொகுப்பாளரும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

"கண்ணீர் புகையால் குழந்தைகள் மூச்சுத் திணறுவதை ஜனநாயகத்தில் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களையே பார்த்து குடிமக்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. ஆறு வயது குழந்தைக்கு இது நிகழக்கூடுமென்றால், இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளை... மேலும் பார்க்க

சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" - உதயநிதி கண்டனம்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

தருமபுரி: எம்எல்ஏ நிகழ்ச்சியில் புறக்கணித்ததால் தற்கொலைக்கு முயன்றாரா தவெக நிர்வாகி?

"குடும்பத்தைக் கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த என்னை எம்.எல்.ஏ-வுடன் உள்ளவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்; என் சாவுக்கு அவர்களே காரணம்" என்று த.வெ.க நகரச் செயலாளர் பேசிய ஆடியோ தருமபுரி மாவட்டத்தில் பரபர... மேலும் பார்க்க

சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் இரவிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் ஜூலை 22-ந... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: மௌனம் கலைத்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - என்ன சொல்கிறார்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லி... மேலும் பார்க்க