செய்திகள் :

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

post image

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தேன் மொழி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் வழக்கறிஞர் முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி என்பவரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கின் முக்கியச் சாட்சியான தங்கவேல் என்பவரைக் கடந்த 7-ம் தேதி வீட்டருகில் வைத்தே கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்ய‌ முயற்சி செய்தனர். இதில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய தங்கவேலு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவில் இருந்து கூலிப்படையை வரவழைத்து படுகொலை நிகழ்த்த திட்டமிட்ட நெல்லை முன்னாள் எஸ்.ஐ சரவணன் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

கைதான முன்னாள் எஸ்.ஐ சரவணன்
கைதான முன்னாள் எஸ்.ஐ சரவணன்

கவின் ஆணவக்கொலை வழிக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் பாளையங்கோட்டை சிறையில் இருந்த சமயத்தில் தண்டபாணியுடன் தொடர்பு ஏற்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் படுகொலை முயற்சிக்குத் திட்டம் தீட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சரவணன் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆணவப்படுகொலை வழக்கில் சிறையில் இருந்த சமயத்தில் மற்றொரு படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டி கூலிப்படையை ஏவிய சரவணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க