செய்திகள் :

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடைக்குள் புகுந்த சிறுத்தைபுலி தோடரைசிங் என்ற இடத்தில் உள்ள மதுபானக்கடைக்குள் திடீரென நுழைந்தது.

அச்சிறுத்தைபுலி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அந்த சிறுத்தைபுலி மிகவும் பிஸியான சந்தைக்கு வழியாக மதுபானக் கடைக்குள் புகுந்தது. ஆரம்பத்தில் சிறுத்தைப்புலி நகருக்கு அருகில் உள்ள புதர்களில் பதுங்கியிருந்ததை பொதுமக்கள் முதலில் கண்டறிந்தனர்.

இதையடுத்து உள்ளூர்வாசிகள் எச்சரித்ததையடுத்து வன தன்னார்வலர் ராகேஷ் மாலி அப்பகுதியை ஆய்வு செய்ய சென்றார். ஆனால் சிறுத்தை புலி திடீரென அவர் மீது பாய்ந்தது. இதில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது.

பின்னர் சிறுத்தை புலி சந்தைக்குள் கிட்டத்தட்ட 400 மீட்டர் ஓடியது. மார்க்கெட்டில் இருந்த மதுக்கடைக்கு வெளியில் அமர்ந்திருந்த பதே லால் கோலி என்பவரை முதலில் அது தாக்கியது. அதன் பிறகு 25 வயது மது விற்பனையாளர் சஞ்சய் குர்ஜார் என்பவரை தாக்கியது.

இதில் அவரின் மூக்கு, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதால் கடையை விட்டு வெளியே ஓடி தப்பினார். சிறுத்தைபுலி மதுபானக்கடைக்குள் புகுந்தது. உடனே மக்கள் கடையின் கதவை மூடினர். வனத்துறைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தைபுலியின் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும், டோங்கில் இருந்து வன அதிகாரிகள் மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையில் இருந்து சிறப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு, சிறுத்தை பாதுகாப்பாக மயக்க மருந்து அளித்து மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டோங்க் வனப் பிரிவு அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தைபுலியை பிடிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கிய மூத்த கால்நடை மருத்துவர் அசோக் தன்வார் இது குறித்து கூறுகையில், ``பிடிபட்டது ஒரு ஆண் சிறுத்தை. நான் இதுவரை 60க்கும் மேற்பட்ட வனவிலங்கு மீட்புப் பணிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் மதுக்கடைக்குள் இருந்து சிறுத்தையை மீட்டது இதுவே முதல்முறை'' என விவரித்தார். மதுபான கடைக்குள் புகுந்த சிறுத்தையை பிடிப்பதை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் கூடினர்.

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.... மேலும் பார்க்க

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இர... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் ப... மேலும் பார்க்க

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க