செய்திகள் :

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

post image

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

இதில் பயணிகள் இடையே அடிக்கடி சண்டையும் நடப்பதுண்டு. கடந்த மாதம் இது போன்ற ஒரு சண்டையில் வாலிபர் ஒருவர் புறநகர் ரயிலில் பயணிகள் முன்னிலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது போன்ற சண்டையில் பெண் பயணிகளும் அடிக்கடி ஈடுபடுவதுண்டு.

டோம்பிவிலி மற்றும் கல்யாண் இடையே மும்பை புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் இருக்கை தகராறில் ஒரு பெண் சக பயணிகள் மீது மிளகுப் பொடியை ஸ்பிரே தெளித்துள்ளார். மிளகுப் பொடியை ஸ்பிரே செய்த பெண் சத்ரபதி சிவாஜிரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மிளகுப் பொடியை ஸ்பிரே செய்த பெண்
மிளகுப் பொடியை ஸ்பிரே செய்த பெண்

கல்யான் ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குப் புறப்படும் ரயிலில் இருக்கைகளைப் பிடிப்பதற்காக அந்த ரயில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து கல்யான் வரும்போது முந்தைய ரயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் ஏறி இருக்கைகளைப் பிடித்துக்கொள்வது வழக்கம்.

அவ்வாறு டோம்பிவலி ரயில் நிலையத்தில் இருந்து முன்கூட்டியே ஏறி வந்து ரயிலில் இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்த பயணிகளுக்கும், கல்யான் ரயில் நிலையத்திலிருந்து ஏறிய பெண் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருக்கைகளில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. அவர்களில் டோம்பிவலியில் இருந்து ரயிலில் ஏறிய பயணிகளில் ஒரு பெண் தன்னிடம் இருந்த மிளகுப் பொடியை சக பயணி மீது ஸ்பிரே செய்தார்.

இது குறித்து கல்யான் பயணிகள் உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மிளகு ஸ்பிரே அடித்த பெண் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதே போன்று பரேல்-அம்பர்நாத் ரயிலில் இருக்கைக்காக ஏற்பட்ட சண்டையில் மூன்று பேர் காயமடைந்தனர்.

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க