செய்திகள் :

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

post image

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்தோம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையில், கள ஆய்வு குழுவை அமைத்தார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பயணித்து தி.மு.க தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்கள் சொன்ன கருத்துகளைத் தொகுத்து அறிக்கைகளாகத் தயார் செய்து, பெரிய பெரிய பெட்டிகளில் வைத்து தலைமையிடம் சமர்ப்பித்தனர் கள ஆய்வுக்குழுவினர்.

பிறகு, ‘மறுசீரமைப்புக் குழு’ ஒன்றை அமைத்து இறுதி அறிக்கை தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

திமுக - உதயநிதி ஸ்டாலின்
திமுக - உதயநிதி ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ''பொதுச்செயலாளர் மாற்றப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகளில் இளைஞர்கள் இடம்பெற வேண்டும்; மேலும் குறுநில மன்னர்களாகத் திகழும் மண்டலப் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ முறையைக் கொண்டுவர வேண்டும்; உதயநிதி கட்சியை வழிநடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய ஃபைலை தி.மு.க தலைவரிடம் சமர்பிக்கவுள்ளனர் ஆய்வு குழுவினர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி அறிக்கை தரப்பட்டு செப்டம்பரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவுக்குப் பிறகு தி.மு.க அதிரடி மாற்றங்கள் நிகழப் போகின்றன. இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, கட்சி தலைமைப் பொறுப்புகளுக்கு நகர விரும்புகிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.

உதயநிதி, கனிமொழி
உதயநிதி, கனிமொழி

செயல் தலைவராகவோ, முதன்மைச் செயலாளராகவோ, பொருளாளராகவோ அவரை நியமிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் குறித்து துணை பொதுச் செயலாளர் கனிமொழியுடன் உதயநிதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்" என்றனர்

இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டால், அடுத்த இளைஞரணிச் செயலாளர் யார் என்ற பரபரப்பு அறிவாலயத்தை பற்றிக் கொண்டிருக்கிறது!

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க