செய்திகள் :

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

post image

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார்.

ஆனால் இது குறித்து அமிர்தாவிற்கு சமீபத்தில் தெரிய வந்தது. இதனால் அமிர்தா தனது காதல் உறவை முறித்துக்கொண்டார். சம்பவத்தன்று மாலை கோடஹள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அமிர்தா நடந்து சென்றபோது தனுஷ் சகோதரர் சூர்யா அவரை வழிமறித்து தனது சகோதரருடனான உறவை ஏன் முறித்துக்கொண்டாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அமிர்தாவை சூர்யா கத்தியால் சரமாறியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவரை பொது மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த அமிர்தாவை போலீஸார் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

கத்திக்குத்து
கத்திக்குத்து

48 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிகிச்சை பலனலிக்காமல் அமிர்தா உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் அண்ணனின் காதலை நிராகரித்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று சூர்யா ஏற்கனவே அமிர்தாவை மிரட்டியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பொதுவெளியில் நடந்துள்ளது. இக்கொலை தொடர்பாக சூர்யா மட்டுமல்லாமல் தனுஷும் கைது செய்யப்பட்டுள்ளார். அமிர்தா மற்றும் தனுஷ் குடும்பம் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் மத நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து கலந்து கொண்டபோது அமிர்தா மற்றும் தனுஷ் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க