செய்திகள் :

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

post image

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளியான அவரது மரணத்துக்கு நீதிகேட்டு, உடலை வாங்காமல் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் அரசு வேலை, குழந்தை படிக்க உதவி, வீட்டுமனை போன்ற நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறுவதற்காக தமிழக சுற்றுலா துறை அமைச்சர்  ராஜேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் நேற்று இரவு 9.40 மணியளவில் சபரிவர்மன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். அமைச்சர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரதாப், எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் சென்றனர்.  சபரிவர்மனின் மனைவி அனந்தவள்ளி, அவரது சகோதரி கவுதமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது கோரிக்கைகளையும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது, சபரி வர்மன் உயிரிழப்புக்கு முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்ததுடன், அமைச்சர்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

மரணமடைந்த சபரி வர்மன்
மரணமடைந்த சபரி வர்மன்

சபரிவர்மனின் குடும்பத்தினருடன் சுமார் 30 நிமிடம் பேசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேவந்த அமைச்சர்கள் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் கூறுகையில், "சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தும், அவற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரேத பரிசோதனை வீடியோவை  எங்களின் தரப்பு மருத்துவ குழுவிடம் வழங்கி ஆய்வு செய்வோம். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடுவோம். அதற்காக ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையில் தவறு இல்லை என்றால் உடலை வாங்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.

அமைச்சர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீநாத் ஆகியோர் சபரிவர்மன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்

சபரிவர்மன் இறந்தது எத்தனை மணிக்கு என்ற விபரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கொலை வழக்கில் சிறை வார்டன்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், சிறையில் இருந்த 8 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்த  குற்றவாளிகள் சிலர் கொடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே , இது வழக்கை திசைதிருப்பும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது" என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க