செய்திகள் :

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

post image

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸார் சென்றனர். பின்னர் அங்குள்ள அறைகளில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சபீக் ரகுமான் (37) என்பவர் தங்கியிருந்த அறையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரசன்சிகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், விசாரணைக்காக சபீக் ரகுமானை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. அதன் மதிப்பு 11 லட்சம் ரூபாயாகும்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

கள்ள நோட்டுக்கள் குறித்து சபீக் ரகுமானிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதவிர அவரிடம் 11,21,300 ரூபாயும், 25,000 Euro கரன்சிகளும் இருந்தன. வெளிநாட்டு கரன்சியின் இந்திய மதிப்பு சுமார் 27 லட்சம் ரூபாயாகும். வெளிநாட்டு கரன்சி குறித்தும் சபீக் ரகுமானிடம் விசாரித்து வருகிறார்கள். அவரிடமிருந்த இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். விசாரணை வளையத்துக்குள் இருக்கும் சபீக் ரகுமான், டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்தது யார் என்று விசாரித்து வருகிறார்கள். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் கள்ள நோட்டு கும்பலின் பின்னணி தெரியவரும் என்கிறார்கள் போலீஸார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``இந்த வழக்கில் சிக்கியிருக்கும் சபீக் ரகுமானின் பின்னணி குறித்து விசாரித்த போது தஞ்சாவூரைச் சேர்ந்த கள்ள நோட்டு பிசினஸ் கும்பலைச் சேர்ந்த ரவிசந்திரன் குறித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக ரவிசந்திரனைப் பிடித்து விசாரித்தபோது அவர் மலேசியாவில் பணியாற்றிய போது அங்குள்ள கள்ளநோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்தக் கும்பலிடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கி சென்னையில் புழக்கத்துக்கு விட்டது தெரியவந்திருக்கிறது. இந்தக் கள்ள நோட்டு கும்பலில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவரும் எங்களின் சந்தேக வளையத்திலிருக்கிறார். இந்த வழக்கில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்''என்றனர்.

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க

சகோதரியின் கணவர் மீது காதல்: வருங்கால கணவனை வரவைத்து கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

புனேயில் ஷியா என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவத்த... மேலும் பார்க்க

ரத்தவெள்ளத்தில் கணவன்; உயிருக்குப் போராடிய மகன்; போனை பார்த்துகொண்டிருந்த தாய்; பெங்களூருவில் பகீர்

கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு ... மேலும் பார்க்க

விருதுநகர்: நிச்சயத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு - இளம்பெண்ணையும், தாயையும் வெட்டிய மணமகன்

விருதுநகரில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் அரிவாளால் சரமாரியாக வெட்டிய நிலையில், தடுக்க முயன்ற தாயையும் வெட்டியுள்ளார். இதில் பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்... மேலும் பார்க்க