"தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்..." - காவலர் தேர்வு தள்ளிவைப்பு...
"பாஜக-வும் திமுக-வும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது; ஏனென்றால்..." - ஜெயராம் ரமேஷின் விளக்கம் என்ன?
திமுகவும், பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்கிற செய்தி தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
காங்கிரஸுடன் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக, கடந்த மாதம் டெல்லியில் நடந்த இந்தியாக் கூட்டணி கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், திமுக - பாஜக கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேசியுள்ளார்...

"பா.ஜ.கவும் தி.மு.கவும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது. ஏனெனில், இரு கட்சிகளின் கொள்கைகளும் வேறு வேறு.
கடந்த 8-ஆம் தேதி நடந்த இந்தியாக் கூட்டணியின் கூட்டத்தில் தி.மு.க பங்கேற்கவில்லை என்பதும், நாம் த.வெ.கவை ஆதரித்து வருகிறோம் என்பதும் உண்மைதான்.
தற்போதைய தமிழ்நாட்டு அரசில் காங்கிரஸிற்கு இரண்டு அமைச்சர்களும் உள்ளனர். அதே நேரத்தில், நாம் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்து வருகிறோம். பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க இன்னும் ஒரு எதிர்க்கட்சிதான். அது ஆளுங்கட்சியோ அல்லது பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணியின் ஒரு பகுதியோ அல்ல.
நான் ஸ்டாலினின் அறிக்கைகளைப் படித்துள்ளேன். பா.ஜ.கவிற்கும் தி.மு.கவிற்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் இல்லை என்பது அதில் தெளிவாகத் தெரிகிறது.
சரியான நேரம் வரும்போது, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக தி.மு.க உறுதியாக நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது"















