செய்திகள் :

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

post image

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மேயர் ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, “மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டலத் தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

அவருடன் தி.மு.க கவுன்சிலர்களும், ஆணையாளர் முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக, காங்கிரஸ் மோதல்
திமுக, காங்கிரஸ் மோதல்

அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு செம்மொழி பூங்காவில் ரூ. 40 கோடி முறையீடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அ.தி.மு.க  கவுன்சிலர்கள் குடிதண்ணீர் வழங்க கோரி காலி குடங்களுடன் தனியாகப் போராட்டம் நடத்தினர். சி.பி.ஐ, சி.பி.எம் கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது எனக் கூறி தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்றக் கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது.

திமுக, காங்கிரஸ் மோதல்
திமுக, காங்கிரஸ் மோதல்

அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், தி.மு.க பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தி.மு.க பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையைப் பிடித்து இழுத்தனர். அதனை மீறி  காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று, மாநகராட்சி ஆணையாளருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து கூச்சல் குழப்பம் முடிவுக்கு வராமல் கடும் அமளி ஏற்பட்டதால் மாமன்றக் கூட்டத்தை 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.

மேயர் ரங்கநாயகி
மேயர் ரங்கநாயகி

மேலும் சி.பி.எம் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, சி.பி.ஐ கவுன்சிலர்கள் சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகியோரை 5 பேரை இரண்டு மாத காலத்துக்குப் பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி  உத்தரவிட்டார். மாநகராட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாகப் பரபரப்பான சூழல் நிலவியது.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க

'நித்யானந்தாவின் கைலாசாவோடு தவெக அரசு ராஜாங்கரீதியான உறவா?' - விவரம் என்ன?

நிநித்யானந்தாவின் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் தவெக அரசின் அமைச்சர்களை சந்தித்து ராஜாங்கரீதியான உறவுகள் குறித்து விவாதித்ததாக நித்யானந்தா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.நித்யானந்தாஇ... மேலும் பார்க்க