செய்திகள் :

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

post image

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இருந்து வந்தது.

இந்தச் சோதனை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ரயிலில் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு புதிய ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இது டீசல் ரயில்களுக்கு மாற்றாக இருக்கும். இந்த ரயிலில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அடங்கும்.

இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், "ஹைட்ரஜன் ரயில்களைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரஜன் ரயில்
ஹைட்ரஜன் ரயில்

இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் தற்போது 75 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் 10 பெட்டிகளைக் கொண்டது ஆகும். இந்த ஹைட்ரஜன் ரயிலில் 2600 பேர் பயணம் செய்ய முடியும். இது ஹரியானாவின் ஜிண்ட் சந்திப்பு மற்றும் சோனிபட் இடையே இயக்கப்படும்.

தற்போது ஜெர்மனி, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ரஜனில் ரயில்களை இயக்கி சோதனை செய்து வருகின்றன. உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜெர்மன் மேலும் 3 ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜப்பான் அடுத்த ஆண்டு இறுதியில்தான் ஹைட்ரஜன் ரயில்களை அதிகாரபூர்வமாகப் போக்குவரத்திற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அமெரிக்கா 2024ம் ஆண்டு ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்தது.

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் ப... மேலும் பார்க்க

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க