செய்திகள் :

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

post image

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குஜராத்தில் 11-ஆம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்திய ரோஹித் விரேந்திரசிங் ஷக்யா என்ற வாலிபர் நாடு முழுவதும் நடக்கும் இணைய மோசடிகளுக்கு தேவையான போலி மொபைல் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் டெலிகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலியான வங்கி மற்றும் அரசு சார்ந்த மொபைல் செயலிகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் இணையத்தள மோசடி கும்பல்களுக்கு அதனை விற்பனை செய்துள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

கடந்த மே மாதம் சூரத்தை சேர்ந்த ஒருவர் இணைய மோசடி மூலம் ரூ.6 லட்சத்தை இழந்தார். மே 15 மற்றும் 18-க்கு இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ்அப் வழியாக "PNB One.apk" என்ற போலி கோப்பு (file) ஒன்று வந்தது.

அது பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி என்று நம்பி, அவர் அதைத் தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தார். உடனே இணையக் குற்றவாளிகள் அவரது வங்கி விவரங்களை அணுகி, அவரது பிரைம் கூட்டுறவு வங்கி கணக்கிலிருந்து யூனியன் வங்கி கணக்கிற்கு ரூ. 5 லட்சத்தை மாற்றினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் ரோஹித் பிடிபட்டார்.

சூரத் நகர சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது, 16-வது வயதிலேயே சிறந்த 'கோடர்' (coder) ஆகத் திகழ்ந்தார் என்று தெரிய வந்தது. வங்கிகள் மற்றும் அரசின் உண்மையான செயலிகளைப் போலவே தோற்றமளிக்கும் போலி செயலிகளை உருவாக்க அவர் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளையும் டெலிகிராம் சேனல்களையும் பயன்படுத்தினார். அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த APK கோப்புகளை இணையக் குற்றவாளிகளுக்கு மாதம் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தார்.

அந்த போலி மொபைல் செயலிகளை பயன்படுத்தி இணைய மோசடி கும்பல் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் மோசடி செய்துள்ளனர்.சைபர் மோசடிக்கு முக்கிய காரணமான ரோஹித் ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சைபர் மோசடி கும்பல்களுக்கு மொபைல் போன்களில் பணத்தை அபகரிக்க பயன்படும் APK கோப்புகளை உருவாக்கி விற்பனை செய்துள்ளார்.

ரோஹித் இரண்டு வகையான செயலிகளை உருவாக்கியுள்ளார். அதில் ஒன்று, பயனர்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யும் 'பாதிக்கப்பட்டவர் செயலி' (victim app), மற்றொன்று, மோசடி செய்பவர்கள் OTP-கள், வங்கிச் சான்றுகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் நிர்வாகி செயலி' (admin app). ஆகும். இந்த போலியான செயலிகள், SBI, PNB, Axis Bank, UCO Bank, ICICI Bank, Union Bank, BigBasket, American Express, ஆதார் சேவைகள், PM Kisan மற்றும் RTO அபராதத் தொகை செலுத்தும் இணையதளங்கள் உள்ளிட்ட பல நம்பகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளைப் போலத் தோற்றமளித்தன.

போலீஸார் ரோஹித்தின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்தபோது அவர் 121 போலி APK செயலிகளை உருவாக்கியதும், அவை நாடு முழுவதும் 21,672 மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க