செய்திகள் :

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

post image

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அறநிலையத்துறை கோவில்களில் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை இருக்கும். அதுபோல யாரவது சேர்ந்து இருந்தால் கட்டாயம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

யானைகளை நன்கொடையாளர்கள் விரும்பி கோவிலுக்கு கொடுக்கிறார்கள். நீதிமன்ற அனுமதியுடன் கொடுக்கப்படுகிறது. யானைகள் மிகச்சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாகன்களால் வளர்க்கப்படுகிறது. யானைகளுக்கு மருத்துவ உதவி, உணவு சரியாக கொடுக்கப்படுகிறது" என்றார்.

கார்த்திகை தீபம் பிரச்னை வழக்கு குறித்த கேள்விக்கு, "கார்த்திகை தீபம் பிரச்னை இல்லை. கொண்டாட்டம்.  அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டடுவார்கள். மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். எப்பவும் போல கொண்டாடுவோம். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரட்டும். தீர்ப்பு வந்த பின்பு பாருங்கள்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்

கோவிலில் செல்போன் விவகாரத்தில் தோல்வி ஒன்றும் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். கோவிலில் அரசியல் செய்யும் கூட்டம் உள்ளது. நல்லதோ கெட்டதோ அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

தமிழக முதல்வரின் ஆட்சியில் மக்கள் எந்தக்குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக உள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றிக்காக உழைக்க உள்ளோம்.

நாங்கள் ஜெயிப்போமா டெபாசிட் வாங்குவோமா? என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளோம். அதனால் பாசிட்டிவ்வாக யோசியுங்கள்.

எங்கள் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்ற போதே பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர். அவருக்கு எல்லா மதமும் எல்லா மக்களும் ஒன்று தான்.

நாடு முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கையை ஏற்று முதல்வர் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

எங்கள் தலைவருக்கு எம்மதமும் நம் மதம் என்பதுதான் கோட்பாடு" என்றார்.

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே, மீண்டும் கடந்த 20 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். மா... மேலும் பார்க்க

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க

"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள்.கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்... மேலும் பார்க்க

"எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ.!"- கே.என் நேரு

மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? தனது எம்.பி பதவி அப்படியே ... மேலும் பார்க்க